sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.மொவன்குட்டி, கோவை: அந்துமணியாரே... நீங்கள் ஹிந்தி கற்று கொண்டது, கல்லுாரி பருவத்திலா... இல்லை, சமீபத்தில் தானா?

பள்ளியில் படிக்கும் போதே!



ரா.சுப்ரமணியன், மதுரை: சென்ற வாரம் டிராபிக் போலீஸ் அனைவரும் நல்ல நண்பர்கள் என்றும், அனைவரையும், 'கவனித்து' விடுவதாகவும் கூறியிருந்தீர்கள். என்ன மாதிரி, 'கவனிப்பு' சார்?


என் சட்டையின் இடது பக்க பையிலிருந்து தான்!

* கே.நாகராஜன், ராமநாதபுரம்: வாசகர்களிடமிருந்து கேள்விகளே வராவிட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி ஒரு நிலை வந்ததில்லை. தினமும், 150 கார்டுகள்; உங்களைப் போல, 'இ-மெயில்' அனுப்புபவர்களின் கேள்விகள் 100 மற்றும் 'இன்லேண்டு' கடிதங்கள் என, 300 கேள்விகள் வருகின்றன. பொறுப்பாசிரியர், வாரம், வெறும் எட்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத இடம் கொடுத்திருக்கிறார்.

பூவை சுபாவாணன், கோவை: மதிய உணவிற்குப் பிறகு, சிறிது நேரம் உறங்கும் பழக்கம் உண்டா?

மதியம் 1:30 மணி முதல், 3:00 மணி வரை, துாங்கி விடுவேன்!

வி.ராஜா, சென்னை: வெறும், 50 பைசா போஸ்ட் கார்டில் கேட்கப்படும் கேள்விகளை ஏற்றுக் கொள்வீர்களா?

நீங்கள் தானே முதலாளிகள்! 50 பைசா கார்டானாலும், முதலாளிகளுக்கு பதில் அளிக்க வேண்டுமல்லவா!

* டி.ஜெயசிங், கோவை: தமிழகத்தில், 'எங்களுக்கு ஓட்டு போட்டால், மதுவை ஒழிப்போம்...' என்று, எந்தக் கட்சியும் ஏன் கூறுவதில்லை?

அவர்களது தனிப்பட்ட கஜானா நிரம்பாதே!



வி.பிருந்தா, சென்னை:ஒரு காரை, எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள்?


ஒரு லட்சம் கி.மீ., ஓடும் வரை!

எஸ்.சரவணன், நெல்லை:யாரை சிறந்த தந்தை எனக் கூறலாம்?

அளவற்ற செல்வத்தை சம்பாதித்து, தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும், தந்தையை விட, சிக்கனத்தோடும், எளிமையோடும் வாழும் வழியை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் தந்தை தான், சிறந்த தந்தை என்று கூறலாம்!






      Dinamalar
      Follow us