sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 27, 2024

Google News

PUBLISHED ON : அக் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மு.ஆதினி, சேலம்: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நிறங்கள் ஏதேனும் உண்டா?

முன்பெல்லாம், சிவப்பு நிறம் பிடித்திருந்தது; பின், கருப்புக்கு மாறி விட்டேன்!

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு!

வே.முருகேசன், கன்னிவாடி, திண்டுக்கல்: என் வயது, 64. திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். சிறு வயதிலிருந்தே, பிறருக்கு உதவும் குணம் உடையவன். என் மனைவிக்கு இது பிடிக்காது; வசவு வாங்கிக் கொண்டே உதவி செய்கிறேன். வசவுடன் உதவுவதை தொடர்வதா; நிறுத்தி விடவா?

வசவு பாட்டுக்கு வரட்டும்; கண்டு கொள்ளாதீர்கள். உதவுவதை நிறுத்த வேண்டாமே!

எல்.என்.சிவகுமார், சென்னை: உங்களின், 'ஹாபி' எது?

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதுவதும், பா.கே.ப., எழுதுவதும்!

வேலை தான், 'ஹாபி' எனக்கு!

* இரா.நாராயணசாமி, கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, பூங்காக்கள், அரங்கம், நுாலகக் கட்டடங்கள் அனைத்தும் அரசு செலவில் கட்டப்படுகிறதா அல்லது கட்சி செலவிலா?

அரசு பணத்தை வீணாக செலவழிக்கின்றனர்!

* அ.ரவீந்திரன், கன்னியாகுமரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ட, பிரதமர் கனவு என்னாச்சு?

கனவு, கனவாகவே முடியும்; நனவாக வாய்ப்பில்லை!

எம்.மனோகரன், ராமநாதபுரம்: இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கு விற்பனைக்கு வந்த, ஆவின் பால் பாக்கெட்டில், நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதே...

அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற பயம் வந்து விட்டதோ என்னவோ!

தி.நா.பஞ்சாபகேசன், சென்னை: கடந்த 1967லிருந்து கூவம் நதி சீரமைப்புக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில், இன்றும் அப்படியே தானே உள்ளது? பணம் எல்லாம் எங்கே போனது? உண்மையிலேயே என்ன தான் நடந்தது?

பணத்தை கரையானோ, எலியோ தின்று விட்டது!

வெ.கார்த்திகா, திண்டுக்கல்: மனைவிக்கு உதவுவதை, மகா மோசமாக என் உறவினர்கள் பேசுகின்றனரே... என்ன செய்யலாம்?

அப்படிப் பேசுபவர்களைத் தவிர்த்து விடுங்கள்!






      Dinamalar
      Follow us