sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.சம்சு, துாத்துக்குடி: 'தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வரும்போது, பாலம் இடிவது சகஜம் தான்...' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறாரே...

கல்லணை, மேட்டூர், பரம்பிக்குளம் அணைகள் எல்லாம் உறுதியுடன் இருக்கின்றன; அணைகளே அப்படி இருக்கும் போது, பாலங்களும் உறுதியுடன் இருக்க வேண்டுமே... ஏன் இல்லை? யார் தவறு?

கே.சுமதி, சென்னை: சிறுகதை எழுதி, வாரமலர் இதழுக்கு அனுப்பி உள்ளேன். கதையை தேர்ந்தெடுத்து வெளியிடுவீர்களா அல்லது நிச்சயம் என்றாவது ஒருநாள் வெளிவருமா?

நல்ல கருத்துள்ள சிறுகதையாக இருந்தால், தேர்வு செய்து விடுவார், பொறுப்பாசிரியர்; நிச்சயமாக வெளிவரும்!

ஆ.கண்ணதாசன், சென்னை: பலரும் பணம் கொடுத்து, அரசு வேலையில் சேர துடிப்பது ஏன்?

லஞ்சம் கிடைக்கும் என்பதால்!

எம்.கே.எம்.கமாலுதீன், கோவை: தினமலர் - வாரமலர் இதழ் கார்ட்டூனில், வி.ஐ.பி.,களின் புகைப்படங்களுக்கு பதிலாக, ஓவியம் வரைகிறீர்களே... அவர்கள் ஆட்சேபனை செய்கின்றனரா அல்லது பாராட்டுகின்றனரா?

அவர்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்!

* ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்: 'நடிகர் ரஜினி, திரையுலக சூப்பர் ஸ்டார் என்றால், நான், அரசியல் உலக சூப்பர் ஸ்டார்...' என்கிறாரே, சீமான்?

அவர், தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியது தான்!

* எஸ்.கஜலட்சுமி, லால்குடி, திருச்சி: சென்னை சாலைகளில், திடீர் பள்ளம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஒப்பந்ததாரர்களும், அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளும்!

வெ.அனுஷலட்சுமி, சென்னை: 'அறநிலையத் துறையே... கோவிலை விட்டு வெளியேறு...' என, முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேல் பேசுவது, யார் காதிலும் விழவில்லையே...

பணம் கொழிக்கும் துறை அது; அதனால், யார் காதிலும் விழவே விழாது!






      Dinamalar
      Follow us