PUBLISHED ON : செப் 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்மவர்கள் எங்கு சென்றாலும், பொது இடங்களை அசுத்தப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்து தெருக்களில் நம்மவர்களை எச்சரிக்க வைக்கப்பட்ட போர்டு தான், படத்தில் இருப்பது.
இதில், ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழியில், 'இங்கே எச்சில் துப்பாதீர்; மீறினால் 150 டாலர் அபராதம்' என, எழுதப்பட்டு உள்ளது.
வட மாநிலங்களில், குறிப்பாக குஜராத்தில் இருந்து ஏராளமானோர், இங்கு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பான்பராக்கை மென்று, சாலை ஓரம் துப்பி விடுகின்றனர். இது உள்ளூர்வாசிகளை அருவெறுப்பு அடைய செய்துள்ளது. எச்சரிக்கை பலகை வைத்த பின், ஓரளவுக்கு எச்சில் துப்புவது குறைந்துள்ளதாம்.
— ஜோல்னாபையன்