
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்தர்கள் வேண்டுதலுக்காக கோவில்களில், பல பொருட்களை காணிக்கை செலுத்துவதுண்டு. குழந்தைக்காக, தொட்டில் வடிவ பொம்மைகளை கூட காணிக்கையாக வைப்பர்.
ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில், சிக்கூர் பாலாஜி கோவிலை, 108 தடவை சுற்றிவந்தால், வெளிநாடு போக விசா கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல, பஞ்சாப் மாநிலம், பாபா நிகால் சிங்ஜி ஷஹீத் குருத்துவாரா முன், சாலையோரம் ஏராளமான கடைகளில் பிளாஸ்டிக் விமான பொம்மைகள் விற்பனை செய்கின்றனர்.
இக்கோவிலில் விமானம் பொம்மையை காணிக்கை செலுத்தினால், வெளிநாடு செல்ல தடை ஏற்படாது என, நம்புகின்றனர், அங்கு வரும் பக்தர்கள். படத்தில், ஹிந்தி நடிகர் சுனில் க்ரோவர் கையில் விமான பொம்மையுடன் நிற்பதை காணலாம்.
— ஜோல்னாபையன்