PUBLISHED ON : டிச 01, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று உலகம் சந்திக்கும் முக்கிய சவால், மின்னணு குப்பைகள். மின்னணு பொருட்களின் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில், இந்த குப்பைகள் உலகிற்கே தற்போது தலைவலி ஆகி உள்ளது. மின்னணு குப்பைகளை எப்படி அழிப்பது என, உலக நாடுகள் ஆராய்ந்து வருகிறது.
இந்த குப்பைகளில் தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் உள்ளன. 40 டன் (1டன் = 1,000 கி.கி.,) மின்னணு குப்பையில் இருந்து, 100 கிலோ தங்கம் சேகரிக்கப்படுகிறது. இதுதவிர, ஈயம், குரோமியம், காட்மியம், மெர்க்குரி மற்றும் நிக்கல் போன்ற பொருட்களும் கிடைக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள, எக்சிர் நிறுவனம், இந்த பிரித்தெடுக்கும் வேலையை செய்து வருகிறது.
— ஜோல்னாபையன்