
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமிக்கப் பட்டது, கேரளாவில் தான். அக்., 27, 1973ல், அன்றைய பிரதமர் இந்திராவால், கோழிக்கோட்டில் திறக்கப்பட்டது, பெண்கள் காவல் நிலையம்.
படத்தில் காண்பது, திருச்சூரில் அமைந்துள்ள காவல் நிலைய பெண் புல்லட் படை. இவர்கள் கம்பீரமாக புல்லட்கள் ஓட்டி வருவதை காண, சாலை ஓரம் நிறைய மக்கள் கூடியிருப்பர். 'புல்லட்டில் நகரில் வலம் வரும்போது பெருமையாக இருக்கும்...' என்கின்றனர், இந்த புல்லட் பெண் போலீசார்.
— ஜோல்னாபையன்