
ஜெர்மானியர்கள் டிசம்பர் மாதத்தை, கிறிஸ்துமஸ் மாதம் என போற்றுகின்றனர்.
* அமெரிக்காவில் ஜனவரி 6ம் தேதியை, பழைய கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றனர். நான்காம் நுாற்றாண்டு வரை, ஜனவரி 6ம் தேதி தான், கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டதாக கூறுகின்றனர்
* பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார், இயேசு. எனவே, எந்த ஆண்டுகளில் பவுர்ணமி அன்று கிறிஸ்துமஸ் வருகிறதோ, அன்றைய தினத்தை விசேஷமாக கொண்டாடுகின்றனர். இயேசு பிறந்த பிறகு இதுவரை, 72 முறை கிறிஸ்துமஸ் தினங்களில் பவுர்ணமி வந்துள்ளது. கடந்த நுாற்றாண்டில், 1901, 1920, 1931, 1970, 1996 மற்றும் தற்போதைய 21ம் நுாற்றாண்டில் 2015 ஆகிய ஆண்டுகளில், ஆறு விசேஷ கிறிஸ்துமஸ் வந்துள்ளன.
***
பைபிள் என்பது, பிபிளாஸ் என்ற யூத சொல்லில் இருந்து வந்தது. பிபிளாஸ் என்றால், புனித நுால் என்று பொருள்.
* பெத்லகேம் இயேசு பிறந்த ஊர். பெத்லகேம் என்றால், உணவின் இல்லம் என்று பொருள்
* கிறிஸ்துமசின் போது, பசுமையான மரத்தில் சிறுசிறு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கும் வழக்கம், ஜெர்மனியில் தோன்றியது. அந்த நாட்டு அரசன் ஆல்பர்ட் மூலமாக, இங்கிலாந்துக்கு பரவியது. முதன்முதலில், தேவதாரு மரத்தின் கிளையில் தான் அலங்கரித்தனர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா என்று, உலகம் முழுவதும் இந்த வழக்கம் பரவியது.
****
கடந்த, 386ல் முதன்முதலாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பட்டது. அமெரிக்காவின், டே என்ற பெண், இயேசு பிறந்த புனித நாளுக்கு, கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினார்.
* உலகில் மிகப்பெரிய பைபிள், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்ச்சில் உள்ளது. இது, லுாயிஸ் வேனாய் என்பவரால் உருவாக்கப் பட்டது. 8,084 பக்கங்கள் கொண்ட இதன் எடை, 1,094 பவுண்டு (௧ பவுண்டு -0.453 கி கி.,)
* பெத்லகேம் நகரில் உள்ள, நேட்டிவிட்டி தேவாலயம் இயேசு பிறந்த, மாட்டுத் தொழுவத்தின் மீது கட்டப் பட்டுள்ளது.