PUBLISHED ON : நவ 09, 2025

ஊமை விழிகள் படத்தில் இடம்பெற்ற, தோல்வி நிலையென நினைத்தால்...' பாடல், மிகப்பெரிய, 'ஹிட் ஆனது.
இலங்கை போரில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் அறிவிக்கப்படாத தேசிய கீதமானது, 'தோல்வி நிலையென நினைத்தால்...' என்ற, ஆபாவாணன் எழுதிய அற்புதமான பாடல்.
அந்தப் பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடியது. அப்பாடல் காட்சியில், ஜெய்சங்கரும், செந்திலும் நடித்தனர்.
டி.எஸ்.பி., தீனதயாளனை மெருகேற்றி, மெருகேற்றி பின்னாளில், காவல்துறை உயர் அதிகாரிகள் மெச்சும்படி நடித்திருந்தார். விஜயகாந்த். அதுவரை கோலிவுட் கண்டிராத வகையில், ஏராளமான பொருட்செலவில் படம் தயாரானது.
'கால்ஷீட் டே இல்லாத போதும், ஆபா அழைத்த நேரத்தில் எல்லாம் ஆஜரானார், விஜயகாந்த் மொத்தம், 60 நாட்களுக்கும் மேலாக, அல்லும் பகலும் அவர் டி.எஸ்.பி., தீனதயாளனாக அவதாரம் எடுத்தார். விஜிக்கு சொந்தமான கார்கள், ஊமை விழிகள் படப்பிடிப்பில் அதிகம் பயன்பட்டன. அப்படக்குழு என்ன கேட்டாலும், புன்னகை மாறாமல் செய்து கொடுத்தார். ராவுத்தர்.
ஊமை விழிகள் படத் தயாரிப்புக்கென்று தனி அலுவலகம் எதுவும் கிடையாது. 'ரோகிணி லாட்ஜ்' 24 மணி நேரமும் படத்துக்காக இயங்கியது. அரவிந்த்ராஜ், ஆபாவாணன் இருவரும், ராவுத்தரின் தொலைபேசியையே உபயோகித்தனர். படத்தை வெளியிடலாம் என்று எண்ணிய நேரம். மிகக்குறுகிய காலத்தில் சின்ன பட்ஜெட்டில் தயாரான குடும்பச் சித்திரம் ஒன்று. யாரும் எதிர்பாரா விதமாக, 'ஹிட்' ஆகி, அதகளம் செய்து கொண்டிருந்தது. ஏவி.எம்., தயாரிப்பில் எடுக்கப்பட்ட விசுவின், சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் தான் அது. அதன், 'க்ளைமாக்ஸ்' காட்சி, நடிகை லட்சுமியின் நடிப்பில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டது.
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் வெற்றி சூறாவளியில் சிக்கிக் கொள்ளாமல், 1986, சுதந்திர தினத்தன்று வெளியானது, ஊமை விழிகள். அப்போதும், மணிரத்னத்துக்கு மகுடம் சூட்டிய, மவுனராகம் அதே தினத்தில் போட்டிக்கு நின்றது.ஊமை விழிகள் பட டிரெய்லரும். சுவரொட்டிகளும் படத்தின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்டி, வாயைப் பிளக்க வைத்தன. கமலுக்கோ, ரஜினிக்கோ கூட இன்று வரையில் அப்படியொரு பிரம்மாண்ட, 'சஸ்பென்ஸ் திரில்லர்' அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மிக நீண்டகாலம் தென்னக திரையில், ஏவி.எம்.,மின், அதே கண்கள் படம் மட்டுமே மர்ம சித்திரமாக புகழ் பெற்றிருந்தது. அரிதாரமே வேண்டாம் என்று விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார், அதே கண்கள் படத்தின் 'ஹீரோ' ரவிச்சந்திரன். அவரை மீட்டெடுத்து, புதுவாழ்வு கொடுத்தது, ஊமை விழிகள் திரைப்படம்.
பத்திரிகை ஆசிரியர், சந்திரனாக, ஜெய்சங்கர், ஏறக்குறைய கதையின் நாயகனாக வலம் வந்தார். அவரது அற்புதமான பங்களிப்பு படத்துக்கு கூடுதல் வெளிச்சம் பாய்ச்சியது.
'உயிருக்கு உயிராக நேசித்த மனைவி, ரந்த வெள்ளத்தில்! தன் நியாயமான கடமை உணர்வுக்கு எதிரிகள் கொடுத்த இந்த பரிசு எழுப்பிய ஆவேசம். அவளைக் காப்பாற்ற முடியாமல் போன ஆதங்கம். அந்த எதிர்பாராத அதிர்ச்சி. ஊமை விழிகள் மனைவி எழுதி வைத்த வரிகள், விசிறி விட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புகள். இந்தக் காட்சிகளில் ஐமாய்த்து விட்டார், டி.எஸ்.பி.,யாக வரும். விஜயகாந்த்
'மாணவர்களின் பாய்ச்சல் பதினாறடி பாய்ச்சல்...' என்றெல்லாம், 'கல்கி' வார இதழ், படத்துக்கு பாராட்டை வாரி வழங்கியது.
'திரைச்சிற்பியின், விழிகள் என, டைட்டிலில் காட்டுவர். 'பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்களை பொறுத்தவரையில், 'திரைச்சிற்பி' என்ற அந்தப் பதம், விஜயகாந்தை மட்டுமே நிரந்தரமாக குறிக்கும் சொல்லாக நிமிர்ந்து நிற்கிறது.
கடந்த ஜூலை 18, 1986 மற்றும் ஆகஸ்ட் முதல் தேதி, இரு நாட்களிலும், விஜயகாந்த் -எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில், வடிக்கு அளே நீதிபதி மற்றும் வசந்த ராகம் என, இரு படங்களின் வசூல், ஊமை விழிகள் பட வெற்றிக்கு பக்கமேளம் வாசித்தன. அந்த ஆண்டு தீபாவளிக்கு, விஜயகாந்த் நடித்த, தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் என, இரண்டு படங்கள் வெளிவந்தன.
எல்லாரிடமும், எல்லாக் காலத்திலும், இணக்கமாக நடந்து கொள்வதில், விஜயகாந்துக்கு ஈடு இணையே கிடையாது.
ஏவி.எம்., நிறுவனம், ராதிகாவுக்காகவே, தர்மதேவதை படத்தை தயாரித்து வெளியிட்டது. அதில், விஜயகாந்துக்கு அதிக வாய்ப்பு கிடையாது. வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். இருந்தும், எஸ்.பி.முத்துராமன் கேட்டுக் கொண்டதற்காக அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், விஜயகாந்த்.
அதிரடி நடிப்பால் புகழின் உச்சிக்கு சென்றவர், விஜயகாந்த், அவரால் அனைத்து வகையான நடிப்பையும் தர முடியும் என்று, 1986ம் ஆண்டு நிரூபித்தார். எந்த தியேட்டருக்கு சென்றாலும், வருஷமெல்லாம் வசந்தமாக, அங்கு விஜயகாந்த் படங்கள், 'ஹவுஸ்புல்'லாக ஒடிக்கொண்டிருந்தன.
அம்மன் கோவில் கிழக்காலே படத்துக்காக, விஜயகாந்துக்கு, அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான, 'பிலிம் பேர்' விருது கிடைத்தது. அவரோடு இணைந்து, தர்மதேவதை படத்துக்காக சிறந்த நடிகை விருதை பெற்றார், ராதிகா.
கடந்த, 1987, விஜயகாத்தை உச்ச நட்சத்திர வரிசையில் படத்தில் உட்கார வைத்தது.
இப்போது வெளிநாட்டில் படமெடுப்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஆனால், அப்போது ஒரு சினிமா, 'ஹீரோ' அந்நிய தேசத்தில் நடித்து விட்டு வருவது காலரைத் தூக்கி விட்டு கொள்கிற சமாசாரம்
ஹிந்தி இசையமைப்பாளர், ராகுல் தேவ் பர்மன் தமிழ் சினிமாவுக்கு இசை அமைப்பதெல்லாம் கனவாகக் கருதப்பட்ட காலகட்டம். விஜயகாந்த்-நதியா இணைந்து நடித்த ஒரே படம், பூ மழை பொழியது. அதற்கு இசை, ஆர்.டி.பர்மன்.
நதியா பெயரில் கம்மல், வளையல், டிரஸ் என, தமிழர் வாணிபம் செழித்த வசந்த வருஷம். தமிழனை மேலும் உசுப்பேற்றும் விதமாக, வாலி எழுதிய பாடல், 'நதியா... நதியா நைல் நதியா...' என்று துவங்கியது. சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் எடுக்கப்பட்ட முதல், விஜயகாந்த் படம்.
நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூலம், ராமராஜனுக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்த வி. அழகப்பன் இயக்கியிருந்தார். சராசரியாக வசூலித்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என, மூவேந்தர்களை வைத்து மாறுபட்ட திரைச் சித்திரங்களை அநாயாசமாக இயக்கியவர், கே. சங்கர். கடந்த, 1978ல், அவரது, விருவான் வடிவேலன் படம் சாமி படங்களுக்கான, 'ட்ரெண்ட் செட்' ஆகி, பிரமாதமாக ஓடியது.
ரஜினியை வைத்து, படம் தயாரித்து, இயக்க அவரைத் தேடி சென்றார், கே. சங்கர், அவரிடம், ரஜினி என்ன சொன்னார்? அடுத்த வாரம்.
-தொடரும்
- பா. தீனதயாளன்
நன்றி: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொலைபேசி எண்: 7200050073

