
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிட்டிஷ் மன்னர் சார்லசுடன் காணப்படும் இளம் பெண்ணின் பெயர், முனா சம்சுதீன். கேரளாவை சேர்ந்த இவர், சார்லஸின் நேரடி உதவியாளர். காசர்கோடு, டாக்டர் சம்சுதீன் மற்றும் ஹைதராபாத் ஷஹானாசின் மகளான இவர், ஏற்கனவே பல உயர் பதவிகளை வகித்தவர்.
ஜெருசலேம், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில், 'ஐ-கமிஷன்'களில் உயர் பதவியில் இருந்துள்ளார். சார்லஸின் அன்றாட நிகழ்ச்சிகளை வகுப்பது, இவருடைய பணி. சார்லஸ் எங்கு சென்றாலும், உதவியாளர் முனா உடன் செல்வார்.
— ஜோல்னாபையன்