
'ரீ - மேக்' படத்தில், அமீர்கான்!
சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த, மகாராஜா படம், 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின், 'ஹிந்தி, ரீ - மேக்' உரிமையை, பாலிவுட் நடிகர் அமீர்கான் வாங்கி இருக்கிறார்.
கடைசியாக அவர் நடித்த, லால் சிங் தத்தா என்ற படம் தோல்வி அடைந்து விட்டதால், எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார், அமீர்கான்.
'மகாராஜா படத்தின் கதையும், கதாபாத்திரங்களும், என்னை வெகுவாக கவர்ந்ததால், இப்படத்தை நானே தயாரித்து, நடிக்கப் போகிறேன்...' என்று, கூறியுள்ளார்.
சினிமா பொன்னையா
ராஷ்மிகாவின், 'ஹீரோஸ்' ஆல்பம்!
தன்னுடன் நடிக்கும் அனைத்து, 'ஹீரோ'களுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளார், நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் காரணமாக, படப்பிடிப்பு தளங்களில், அவர்களுடன், ஜாலி அரட்டையில் ஈடுபடுகிறார்.
அப்போது, தாங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாக, அவற்றை ஆல்பங்களாக போடுகிறார், ராஷ்மிகா. மேலும், அந்தந்த, 'ஹீரோ'களுக்கும் ஒரு காப்பி அனுப்பி விடுகிறார்.
எலீசா
அடுத்த ரவுண்டுக்கு தயாராகும், அபிராமி!
கமலஹாசனுடன், விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்த, நடிகை அபிராமி, திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.
தற்போது, மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்துள்ள, தக்லைப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், அபிராமி.
'பொன்னியின் செல்வன் படம், த்ரிஷாவுக்கு எப்படி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதோ, அதேபோன்று, எனக்கும் திருப்புமுனையாக இந்த படம் அமையும்...' என்கிறார்.
— எலீசா
வில்லனாக நடிக்க மறுத்த, நாகார்ஜுனா!
வேட்டையன் படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும், கூலி படத்தில் நடித்து வருகிறார், ரஜினிகாந்த். இந்த படத்தில், ஆரம்ப காலத்தில், ரஜினியுடன் பல படங்களில் வில்லனாக நடித்த, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க பேச்சு நடத்தினர்.
ஆனால், அவரோ, 'தற்போது என், 'ஹீரோ' மார்க்கெட், 'ஸ்டெடி'யாக இருப்பதால், இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால், 'ஹீரோ' மார்க்கெட் பாதிக்கும்...' என்று சொல்லி, ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்து விட்டார்.
சினிமா பொன்னையா
மகளை, 'ஹீரோயினி' ஆக்கும், கவுதமி!
தமிழில், குரு சிஷ்யன் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர், நடிகை கவுதமி. அதன்பின், முன்னணி நடிகையாகி விட்டார். சமீபகாலமாக, சில படங்களில், கேரக்டர் ரோல்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், மகள் சுப்புலட்சுமி, லண்டனில் நடிப்பு பயிற்சி படித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக, தமிழ் சினிமாவில் அவரை, 'ஹீரோயினாக' அறிமுகம் செய்ய, சில இயக்குனர்களிடம், தீவிரமாக கதை கேட்டு வருகிறார், கவுதமி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
முன்பெல்லாம், ஹாலிவுட், 'மேக் - அப் மேன்'கள் மூலம், தன் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றி நடிப்பதில், அதிகப்படியான ஆர்வம் காட்டி வந்தார், உலக நாயகன். ஆனால், அப்படி ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அமர்ந்து, 'மேக் - அப்' போட்டு, 'ரிஸ்க்' எடுத்து நடித்த அந்த இரண்டாம் பாகம் படம், தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டாகி விட்டார், நடிகர்.
அதனால், 'இனிமேல், கதை மீது, 100 சதவீதம் நம்பிக்கை ஏற்பட்டாலும் கூட, அதிகப்படியாக 'ரிஸ்க்' எடுப்பதை தவிர்க்கப் போகிறேன்...' என்று, வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார், உலக நாயகன்.
சினி துளிகள்!
* 'நான், 'ஹீரோயின்' ஆக நடித்த படங்களை விட, ராயன் படத்தில் நடித்த தங்கை வேடத்துக்கு தான், பாராட்டுகள் குவிந்து வருகிறது...' என்கிறார், துஷாரா விஜயன்.
* ரஜினியுடன், ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்திருந்த, யோகி பாபு, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக கூறுகிறார். அதோடு, முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் தன் கதாபாத்திரம் இன்னும் வெயிட்டாக இருக்கும் என்கிறார்.
* சிம்புவின், 48வது படத்தை, கமலின், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஓராண்டுக்கு மேல் அப்படம் கிடப்பில் போடப்பட்டதால், தற்போது, அந்த படத்தை, தானே தயாரித்து, நடிக்க திட்டமிட்டுள்ளார், சிம்பு.
* மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்து வந்த, தக்லைப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து,'டப்பிங்' பணிகள் நடைபெற்று வருகிறது.
அவ்ளோதான்!