
ரஜினி படத்தில் இணையும், தனுஷ்!
ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ், அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று, நீண்ட காலமாக முயற்சித்து வந்தார். ஆனாலும், அது கைகூடவில்லை.
இந்நிலையில், கூலி படத்தை அடுத்து, நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், ஜெயிலர் -2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு, தனுஷுக்கு கிடைத்துள்ளது. அதோடு, ரஜினி படம் என்பதால் கதையை கூட கேட்காமல், ஓ.கே., சொல்லிவிட்டார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
நாக தோஷம் நீங்க சிறப்பு பூஜை செய்த, தமன்னா!
தற்போது, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும், தமன்னா, தீவிர ஆன்மிகத்தில் இறங்கி உள்ளார்.
சமீபத்தில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள, காமாக்யா கோவிலில் அவர், சாமி தரிசனம் செய்திருக்கிறார்; அங்குள்ள, நாக தேவதைக்கு சிறப்பு பூஜை செய்திருக்கிறார்.
ஜாதகப்படி, தமன்னாவுக்கு நாகதோஷம் இருப்பதாக, ஜோதிடர் சொன்னதை அடுத்து, இந்த பூஜையில் விரதமிருந்து தான் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
— எலீசா
ரஜினி பாணியை கையில் எடுத்த, விஜய்!
தான் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு, பல படங்களில் தனக்குத்தானே, 'பஞ்ச் டயலாக்' எழுதி, பேசி நடித்தார், ரஜினி. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தான் நடிக்கும், 69வது படத்திற்காகவும் சில, 'பஞ்ச் டயலாக்' எழுதி இருக்கும், விஜய், அவற்றை பேசி நடிக்கப் போகிறார். இந்த, 'டயலாக்'குகளை தியேட்டரில் அவர் பேசும்போது விசில் பறக்கும் என, கூறுகின்றனர், பட குழுவினர்.
சி.பொ.,
நித்யா மேனனுக்கு சிபாரிசு செய்த, விஜய்சேதுபதி!
திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து, தனுஷ் இயக்கி நடிக்கும், இட்லி கடை படத்தில் நடித்து வரும், நித்யா மேனனை, பாண்டியராஜ் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்தில் நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார், விஜய் சேதுபதி.
'சராசரியை விட குறைவான உயரம் கொண்டவர், நித்யா மேனன். இருப்பினும், நடிப்பில் உயரமானவர். அதற்காகவே, அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்கிறார், விஜய்சேதுபதி.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தளபதி நடிகரின் கடைசி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, தாரா நடிகைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
ஆனால், மொத்த கதையையும் கேட்ட அவரோ, 'இந்த கதையில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. தளபதி படம் என்பதற்காக, 'ஜூனியர் ஆர்டிஸ்ட்' போன்று நடிப்பதற்கு நான் தயாராக இல்லை...' என்று சொல்லி, தடாலடியாக நடிக்க மறுத்து விட்டார்.
இப்படி, தன் படத்தில் நடிக்க, தாரா மறுத்து விட்டதால், அவர் மீது செம கோபத்தில் இருக்கிறார், தளபதி நடிகர்.
சினி துளிகள்!
*சில ஆண்டுகளாக, தன் தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தற்போது ஒரே நேரத்தில், இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
* தனுஷ் பாணியில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார், ஜெயம் ரவி. அவர் இயக்கும் முதல் படத்தில், காமெடியன் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார்.
* பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலி வேடத்தில் நடித்த, ஐஸ்வர்யா லட்சுமி தற்போது, ஹலோ மம்மி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
* தன் மகள், ஐஸ்வர்யாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து, நடிகர் அர்ஜுன் இயக்கி வரும், சீதா பயணம் என்ற படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என, மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
அவ்ளோதான்!