
விஜய் மகனுக்கு அதிர்ச்சி கொடுத்த அனிருத்!
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, 'பிசி' ஆன இசையமைப்பாளராகி விட்ட அனிருத்திடம், தான் இயக்கும் முதல் படத்துக்கு இசையமைக்க அழைப்பு விடுத்தார், நடிகர் விஜயின் மகனான, ஜேசன் சஞ்சய்.
ஆனால், அனிருத்தோ, 'அந்த படத்தில், சந்தீப் கிஷன் என்ற பிரபலமில்லாத நடிகர் நடிக்கிறார். இப்போது நான், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் தான் இசை அமைக்கிறேன். அதனால், அடுத்து நீங்கள் இயக்கும் படத்தில் யாரேனும் முன்னணி, 'ஹீரோ'வை நடிக்க வையுங்கள். அப்போது கண்டிப்பாக இசையமைத்து தருகிறேன்...' என்று, சஞ்சய்க்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
— சினிமா பொன்னையா
படங்களை திருப்பியடித்த நயன்தாரா!
தற்போது, ராக்காயி என்ற படத்தில் அதிரடியான கதையின் நாயகியாக நடித்து வரும், நயன்தாரா, அடுத்தடுத்து, 'பான் இந்தியா' படங்களில் நடிப்பதற்கும் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.
மேலும், விஜயின், 69வது படம், அஜித்தின், விடாமுயற்சி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தபோதும், அந்த படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால், திருப்பி அனுப்பி விட்டார், நயன்தாரா.
'இனிமேல் தொடர்ந்து கதையின் நாயகியாகவே தனி, 'ரூட்'டில் பயணிக்கப் போகிறேன்...' என்கிறார்.
— எலீசா
திருமணத்தை வெறுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி!
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து மீண்டும், மணிரத்னம் இயக்கி வரும், தக்லைப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 'தற்போது எனக்கு, 34 வயதான போதும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே இல்லை...' என்கிறார்.
காரணம் கேட்டால், 'சமீபகாலமாக திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான நடிகர், நடிகையரின் வாழ்க்கை, சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்து விடுகிறது. ஓரிரு ஆண்டுகள் மட்டுமே வாழ்வதற்கு எதற்கு திருமணம். அதனால், சிங்கிளாகவே வாழ முடிவெடுத்து விட்டேன்...' என்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி.
— எலீசா
ஷாலினுக்கு, அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
அஜித்தும், ஷாலினியும் திருமணம் செய்து, 25 ஆண்டுகள் ஆகிறது. ஷாலினியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவருக்கு, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார், அஜித்குமார்.
சமீபத்தில், ஷாலினி தன், 44வது பிறந்த நாளை கொண்டாடிய போது, அவருக்கு மிகவும் பிடித்தமான, 'லெக்சஸ்' என்ற, விலை உயர்ந்த காரை பரிசளித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
— சி.பொ.,
பக்தி பழமான சந்தானம்!
நடிகர் சந்தானம் இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும் போது, நெற்றி நிறைய விபூதி பூசி தான் செல்கிறார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தான் எந்த வெளியூர்களுக்கு படப்பிடிப்புக்காக சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும், கோவில்களுக்கு செல்லும் போது எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல், பக்தி பரவசத்துடன் எளிமையான உடைகளை அணிந்து செல்கிறார், சந்தானம்.
— சி.பொ.,
அடுத்த ரவுண்டை துவங்கிய விக்ரம்!
மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த விக்ரமை, சமீப காலமாக மேல் தட்டு இயக்குனர்கள் கண்டுகொள்ளாததால், இளவட்டங்கள் பக்கம் முழுமையாக தாவி விட்டார்.
அதுமட்டுமின்றி, தன் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சத்தம் இல்லாமல், சம்பளத்திலும் பல கோடிகளை குறைத்து, சில தயாரிப்பாளர்களின் அபிமானத்தை பெற்று வருகிறார், விக்ரம்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
மூனுஷா நடிகையை, சில வெளிநாட்டு பாய் பிரண்டுகள், அவர், அவுட்டோர் படப்பிடிப்புகளில் இருக்கும்போது வந்து சந்திக்கின்றனர். இதன் காரணமாக, பல நாட்களில் பட யூனிட்டில் போட்டுக் கொடுக்கும் ஹோட்டல் அறையில் தங்காமல், வெளிநாட்டு பாய் பிரண்டுகளுடன் புதிய ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்து, லுாட்டி அடிக்கிறாராம், மூனுஷா.
அப்படி வரும் பாய் பிராண்டுகள், ஒரு வாரம் அம்மணியுடன் ஜாலி டேரா போட்டு விட்டு, அதன் பிறகே நாடு திரும்புகின்றனர்.
தன் முன்னாள் கணவர், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதை அடுத்து கடுமையான, 'மூட் அவுட்'டில் இருந்து வருகிறார், பாணா காத்தாடி நடிகை. இதனால், வழக்கத்தை விட, போதையில் அதிகமாக நீந்துகிறாராம், அம்மணி.
இப்படி இரவு முழுக்க, அம்மணி சரக்கு அடித்து விட்டு, காலையில் படப்பிடிப்புக்கு செல்வதால், சில நாட்களில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்து விடுகிறார். இதையடுத்து, 'படப்பிடிப்பு இருக்கும் நாட்களில், இரவு நேரங்களில் சரக்கடிக்க வேண்டாம்...' என்று, பாணா காத்தாடி நடிகைக்கு தடை உத்தரவு போட்டுள்ளனர், இயக்குனர்கள்.
சினி துளிகள்!
* ஜப்பான், சீனா என வெளிநாடுகளுக்கு, 'டூர்' செல்லும் போது, அந்த நாட்டு மொழிகளின் வார்த்தைகளை கற்று வந்து, அதன் அர்த்தத்தை இங்குள்ளவர்களிடம் சொல்லி, பெருமை அடித்துக் கொள்கிறார், த்ரிஷா.
* தற்போது ‛சிட்டாடல்' என்ற, வெப் தொடரில் நடித்து வரும், சமந்தா அடுத்து, ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு கல்லெறிந்து வருகிறார்.
அவ்ளோதான்!