
ரஜினியை முந்துவாரா, இயக்குனர் ஷங்கர்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், கூலி படத்தை, ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், 'தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து, நான் இயக்கி உள்ள, கேம் சேஞ்சர் படத்தை, ரஜினி படத்துக்கு முன்னதாகவே, ரூ.1,000 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விடுவேன்...' என்று கூறும், இயக்குனர் ஷங்கர், ஐந்து மொழிகளில் அப்படத்தை வெளியிட்டு, வசூலை வாரி குவிக்க திட்டமிட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
பட்டையை கிளப்பிய, கீர்த்தி சுரேஷ்!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பட்டும்படாமலும், 'கிளாமர்' காண்பித்து நடித்த, கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் நடித்துள்ள, பேபி ஜான் படத்தில், 'நைனா மட்டக்கா...' என்ற பாடலில், படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அந்த பாடலின் வீடியோ வெளியானதை அடுத்து, 'நமக்கெல்லாம் பெரிய அளவில் இந்த நடிகை, 'டப்' கொடுப்பாரோ...' என்று பாலிவுட் நடிகையர் வட்டாரம், 'ஷாக்' ஆகியுள்ளது. அதேசமயம், ஹிந்தி ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்தளித்துள்ள, கீர்த்தி சுரேஷ், தமிழ் ரசிகர்களுக்கும் அதேபோல் வாரி வழங்குவாரா, என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
— எலீசா
விஜய் படத்தில் இணைந்த, வரலட்சுமி சரத்குமார்!
சமீபத்தில், மும்பை தொழிலதிபரை திருமணம் செய்த, வரலட்சுமி சரத்குமார், விஜய் நடித்து வரும், 69வது படத்தில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, விஜய் நடித்த, சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து அதிரவிட்ட வரலட்சுமி, இந்த படத்திலும், 'நெகட்டீவ்' வேடத்தில் நடிக்கிறார். அதோடு, இந்த படத்தில் அவருக்கு, ஒரு சண்டைக்காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
— எலீசா
ஜெயம் ரவி போட்ட 'கண்டிஷன்'
ஜெயம் ரவி நடித்த படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால் தற்போது, சிவகார்த்திகேயன், 'ஹீரோ'வாக நடிக்கும், புறநானுாறு படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார். மேலும், வில்லன் என்றாலும், 'ஹீரோ' என்னை அடித்து துவைப்பது போன்ற சண்டை காட்சிகள் இருக்கக்கூடாது என்று, 'கண்டிஷன்' போட்டுள்ளார்.
'ஹீரோ' வாக நடிக்கும் படங்களுக்கு, 70 நாட்களுக்கு மேல், 'கால்ஷீட்' கொடுத்து, ரூ.16 கோடி சம்பளம் வாங்கி வருகிறார், ஜெயம் ரவி. ஆனால், இந்த படத்தில், 20 நாட்கள் 'கால்ஷீட்' கொடுத்து வில்லனாக நடிப்பதற்கும் அதே, 16 கோடி ரூபாய் சம்பளமாக தர வேண்டும் என்று, 'டீல்' போட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உலக நடிகர் தயாரித்த நான்கெழுத்து படத்தில், ரவுடி பேபி நடிகை அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படமும், 'சூப்பர் ஹிட்' அடித்தது. என்றாலும் அம்மணிக்கு பேசியபடி படக்கூலியை கொடுக்க வில்லையாம், உலக நடிகர். ஒரு சிறிய தொகையை கொடுத்துவிட்டு, அப்புறம் பார்க்கலாம் என்று சொன்ன நடிகர் அப்படியே மறந்து விட்டார். இதனால், 'இந்த படத்துக்காக தாராளமாக நடிப்பை கொட்டி இருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு தாராளமாக இல்லையென்றாலும் பேசியபடியாவது சம்பளத்தை வெட்டாமல் கஞ்சத்தனம் செய்கிறார்களே...' என்று புலம்பி கொண்டு இருக்கிறார், ரவுடி பேபி.
சினி துளிகள்!
ஹிந்தியில், ராமாயணம் படத்தில் நடித்து வரும் நிலையில், இன்னொரு படத்தில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார், சாய் பல்லவி
தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே இருந்து வந்த மோதல் மறைந்து, மீண்டும் நட்பு துளிர்விட்டுள்ளது. இதையடுத்து, சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட இருவரும், ஒரு, 'ஹிட்' பாடலுக்கு அனைவர் முன்னிலையிலும் நடனமாடினர்.
என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த, அனிகா சுரேந்திரன், தற்போது, தனுஷ் இயக்கி உள்ள, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இதுவரை, ‛சாப்ட்'டான வேடங்களாக நடித்து வந்துள்ள, கோட் பட நாயகி, மீனாட்சி சவுத்ரி, அடுத்தபடியாக, 'ஆக்ஷன்' கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார்.
அவ்ளோதான்!