
சுந்தர்.சிக்கு அழைப்பு விடுக்கும், 'மெகா ஹீரோ'கள்!
இயக்குனர் சுந்தர்.சியை பொறுத்தவரை, கோர்வையாக கதை சொல்லத் தெரியாது என, அவர் மீது நம்பிக்கை இல்லாமல் சில முன்னணி, 'ஹீரோ'கள், அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.
தற்போது, அரண்மனை-4, மதகஜராஜா மற்றும் கேங்ஸ்டர் போன்ற படங்கள் அடுத்தடுத்து, 'சூப்பர் ஹிட்' அடித்தது. இதையடுத்து, சுந்தர்.சி முழுக்கதையையும், காட்சி வாரியாக சொல்லாவிட்டாலும், ஒன்லைனை மட்டும் சொன்னாலே போதும் என, அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி, 'ஹீரோ'கள் பலரும், 'கிரீன் சிக்னல்' கொடுத்து வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
கண்ணழகில் இருந்து இடுப்பழகுக்கு மாறும், பிரியா வாரியர்!
மலையாளத்தில், 2018ல் வெளியான, ஒரு அடார் லவ் என்ற படத்தில், 'ஹீரோ'வை பார்த்து கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலமானவர், பிரியா வாரியர்.
இந்நிலையில், தமிழிலும் பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியாக, அஜித்தின், குட் பேட் அக்லி படத்தில், 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா...' என்ற பாடலில், தன் இடுப்பு அழகை வெளிப்படுத்தி நடித்த, பிரியா வாரியர், மீண்டும் ரசிகர்கள் மத்தியில், பிரபலமாகி வருகிறார்.
இதையடுத்து அவரை, சிம்ரன் பாணியில் குட்டை பாவாடை நடிகையாக்கும் முயற்சியில் சில, 'கமர்ஷியல்' இயக்குனர்கள் களமிறங்கியுள்ளனர்.
— எலீசா
கூலி படத்தில் புதுமையான, ரஜினி!
தற்போது, ரஜினி நடிப்பில், கூலி என்ற படத்தை இயக்கி இருக்கும், லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத, புதுமையான முறையில், ரஜினிகாந்தை திரையில் கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்.
குறிப்பாக, 'ஹீரோ' மற்றும் வில்லத்தனம், காமெடி என, மூன்று விதமான நடிப்பையும் கலந்து கொடுத்து இருக்கிறாராம், ரஜினி. அதனால், கூலி படம் அவரது ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதுமையாக இருக்கும் என்கிறார், லோகேஷ் கனகராஜ்.
— சி.பொ.,
இளவட்ட, 'ஹீரோ'களின் கமல், 'சென்டிமென்ட்!'
ஆரம்ப காலத்தில் கமல், 'ஹீரோ'வாக நடித்த படங்களில், வில்லனாக நடித்த, ரஜினி, சத்யராஜ் போன்ற பலர் பிரபலமாயினர். அதேபோல் சமீப காலமாக, கமல் படங்களில் வில்லனாக நடிக்கும், பகத் பாசில் உள்ளிட்ட இளவட்ட நடிகர்களும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாகவே, கமல் படத்தில் வில்லனாக நடித்து, தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக, அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களிடம், வில்லன் வேடம் கேட்டு வருகின்றனர், சில நடிகர்கள்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தாரா நடிகை நடித்த பல படங்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்து விட்டது. அதனால், தற்போது புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்பவர்கள், பேசியதில் பாதி சம்பளத்தை மட்டுமே கொடுத்து, சம்பந்தப்பட்ட படம் வெற்றி பெற்றால் மட்டுமே மீதி சம்பளத்தை தருவதாக, 'அக்ரிமென்ட்' போடுகின்றனர்.
தான் பேசிய சம்பளம் மட்டுமின்றி, படத்தின் லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதத்தை கேட்டு வாங்க திட்டமிட்டு வந்தார், தாரா நடிகை. இப்படி, தன்னால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், தன் சம்பளத்திலேயே தயாரிப்பாளர்கள் கை வைத்து விட்டதால் கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
சினி துளிகள்!
* குத்து பாட்டு நடிகையாக உருவெடுத்துள்ள, ஸ்ரேயா, 'பிகினி வீடியோ'களை வெளியிட்டு, இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
* சிவகார்த்திகேயன் நடிப்பில், பராசக்தி படத்தை இயக்கி வரும் சுதா, தன் அடுத்த படத்தில், சிம்புவை நடிக்க வைக்கிறார்.
* நயன்தாரா நடித்து நேரடியாக ஓ.டி.டி.,யில் வெளியான, டெஸ்ட் படம் படுதோல்வி அடைந்து விட்டது.
* சிம்ரனிடம், 'ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே...' என, யாராவது கேட்டால், 'ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடிப்பது தவறில்லை; 'டம்மி'யான வேடத்தில் தான் நடிக்க கூடாது...' என்கிறார்.
* இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் தெலுங்கு நடிகை, ஸ்ரீலீலா, தற்போது மூன்றாவதாக, ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்துள்ளார்.
அவ்ளோதான்!

