PUBLISHED ON : செப் 08, 2024

கோவில், திருமண மண்டபம் மற்றும் ரிசார்ட் என்ற நிலையை தாண்டி, இன்று திருமணங்கள் கப்பலை நெருங்கி விட்டன.
கோடிகளை பற்றி கவலைப்படாதவர்கள், தற்போது, தங்கள் வீட்டுத் திருமணத்தை, சொகுசு கப்பலில் நடத்த துவங்கி விட்டனர்.
'எங்கள் கல்யாணத்தை பற்றி ஊர் பேசணும் அல்லது பேசப்படும் இடத்தில் கல்யாணம் நடக்கணும்...' என எண்ணுகின்றனர், பல செல்வந்தர்கள்.
சரி, கப்பலில் கல்யாணம் செய்ய எவ்வளவு செலவாகும்? குறைந்தபட்சம், 3.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.
செல்லும் இடம், பங்கேற்கும் விருந்தினர், ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் சார்ந்து, இவை அதிகரிக்கும்.
சிறப்பு நிகழ்ச்சிகளில், மேஜிக் ஷோ, லைட் மியூசிக், சல்சா பாடல்கள், டி.ஜே., பார்ட்டிகள், நீச்சல், ஸ்பெஷல் ஸ்பா சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் என, பல வகை உண்டு.
திருமணத்தில், 200லிருந்து 300 விருந்தினர்கள் வரை பங்கேற்கலாம். கப்பல் உள்ளேயே விருந்தினர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்வர்.
மத்திய தரைகடல் பகுதி, சிங்கப்பூர் மற்றும் பார்சிலோனா ஆகிய பகுதிகளுக்கு தான், தற்போது, 'டிமாண்ட்' அதிகம்.
இவற்றை உங்களுக்கு ஏற்பாடு செய்து தர, டில்லி, மும்பை உட்பட பல நகரங்களில் திருமண ஏற்பாடு நிறுவனங்கள் உள்ளன.
— ஜோல்னாபையன்