PUBLISHED ON : ஜூன் 01, 2025

பிரபல ஹாலிவுட் திரைப்படமான, இண்டியானா ஜோன்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி, ஐந்து கோடி ரூபாய்க்கு மேல், ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
கடந்த, 1980 - 1990களைச் சேர்ந்தவர்களுக்கு விருப்பமான, ஹாலிவுட் படங்களில், இண்டியானா ஜோன்ஸ் நிச்சயம் இருக்கும்.
கடந்த 1984ல், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான, இண்டியானா ஜோன்ஸ் அண்டு த டெம்பிள் ஆப் டூம் படம் தான், இண்டியானா ஜோன்ஸ் பட வரிசைகளுக்கு துவக்கப்புள்ளி.
இந்த படத்தின் மூலம், இண்டியானா ஜோன்ஸாக அறிமுகமான, ஹாரிசன் போர்ட், பின்னர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இண்டியானா ஜோன்ஸ் என்றால், ஹாரிசன் போர்ட் தான் என்றே மனதில் பதிந்து விட்டார்.
கடைசியாக வந்த, டயல் ஆப் டெஸ்டினி படத்திலும், ஹாரிசன் போர்டே, இண்டியானா ஜோன்ஸ் ஆக நடித்திருந்தார்.
அப்படிப்பட்ட, இண்டியானா ஜோன்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி ஒன்று, சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. டெம்பிள் ஆப் டூம் படத்தில், ஹாரிசன் பயன்படுத்திய இந்த தொப்பி, அவரது, 'டூப்' கலைஞரான, டீன் பெராடினி என்பவரிடம் இருந்தது. சமீபத்தில், டீன் பெராடினி மறைந்து விட்டதால், இந்த தொப்பி ஏலத்துக்கு வந்தது. இந்திய மதிப்பில் இந்த தொப்பி, சுமார் 5.28 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னாபையன்