
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு பிரதேசத்தில் உள்ள ஒன்பது கிணறுகளில் மட்டும் சுடு தண்ணீர் உள்ளன. இது புண்ணியமான கிணறுகள் என்றும், இதில், ஸ்நானம் செய்தால், உடல் நலமாக இருக்கும் என்றும், அங்கு பரவலாக பேசப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள பஜ்றாதேவி கோவிலில் தான், இந்த அதிசய கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் சதுர வடிவில் அமைக்கப்பட்டு உள்ளன. இதமான சுடு தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஏராளமான சாமியார்களும் வந்து கிணற்றுக்குள் இறங்கி, தியானம் செய்வதை காணலாம்.
அக்கம் பக்கத்தில் வேறு பல கிணறுகள் இருந்தாலும், அதில் சுடு தண்ணீர் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.
— ஜோல்னாபையன்

