sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!

/

கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!

கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!

கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!


PUBLISHED ON : ஆக 11, 2024

Google News

PUBLISHED ON : ஆக 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சும்மா கிடைத்து விடவில்லை

இந்த சுதந்திரம்

பசி துாக்கம் மறந்து

இரவு பகல் போராடி

பெற்ற சுதந்திரம்!

* மண் குடித்த ரத்தத்தை

விண் படித்ததோ

வீணாய் போகவில்லை

கடவுளின்

கண் திறந்தது!

* பாரதியின் வீரப்பாட்டில்

அண்ணலின் அகிம்சை

வழியில் கிடைத்த

சுதந்திரம்

பேணி காப்போம்!

* அன்று வெளியேறியது

வெள்ளையர்கள்

இன்னும் உள்ளே இருப்பது

கொள்ளையர்கள்

களைகளை களைவோம்!

* பொருளாதார தரத்தில்

அந்நிய முதலீட்டை

தடை செய்வோம்

சொந்த நாட்டை

முன்னேற செய்வோம்!

* வேலை வாய்ப்பை

பெருக்குவோம்

பாலை நிலங்களையும்

சோலைவனமாய்

மாற்றுவோம்!

* மாசற்ற மனிதர்களாய்

வாழ்ந்து காட்டி

பெற்ற சுதந்தரத்தின்

சரித்திரங்களை

மறவாமல் பயணிப்போம்!

* நிலத்தை நீரை

விவசாயத்தை உழைப்போரை

காத்திடுவோம்

சுதந்திரத்தின்

பலனை பெற்றிடுவோம்!

- சங்கீதா சுரேஷ், தருமபுரி.






      Dinamalar
      Follow us