PUBLISHED ON : அக் 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலையுதிர் காலத்தில்
உதிரும் இலைகளுக்காக
மரங்கள் கவலைப்படுவதில்லை...
மீண்டும் துளிர்க்கும்
என்ற நம்பிக்கையை
அவைகள் விடுவதுமில்லை!
சிறு தோல்விகளுக்கும்
கலங்கும் மனிதருக்கு
மரங்கள் அறிவுரை சொல்கின்றன
தோல்விக்கு பயந்தவர்களுக்கு
அவைகள் பாடம் நடத்துகின்றன!
துளிர்க்கும் இலைகளில் இருக்கிறது
மரத்தின் நம்பிக்கை
துரத்தும் தோல்விகளைக் கண்டு
அஞ்சாமல் இருத்தல்
மனிதனின் நம்பிக்கை!
ஒரு விதையில் முளைத்த மரத்தில்
இருக்கிறது ஆயிரம் விதைகள்
நீ நம்பிக்கை விதையை
உன்னுள் விதைத்தால்
மரமாய் வளரும் வாழ்க்கை!
மனம் என்ற மண்ணில்
நம்பிக்கை என்ற விதை விதைத்து
செயல் என்ற தண்ணீர் ஊற்றினால்
வெற்றி என்ற விருட்சம்
வேகமாய் வளரும் நிச்சயம்!
— என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.