/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - மலர்ந்தது அன்பின் தீப ஒளி!
/
கவிதைச்சோலை - மலர்ந்தது அன்பின் தீப ஒளி!
PUBLISHED ON : அக் 27, 2024

இனிமை நிறைந்து வந்தது தீபாவளி
இனி எங்கும் நிறைவது தீப ஒளி
இந்த தேசம் காணப் போவது நல்வழி
இனி யாரும் நாடப் போவதில்லை பொய்மொழி!
நன்மைகள் விளைய வந்தது தீபாவளி
நலன்கள் விசாரிக்க வந்தது தீப ஒளி
நல்லவை எல்லாம் வளர மலர்ந்தது ஒளி
நாட்டரை வாழ வைத்தது அன்பு மொழி!
நிலவின் இனிமையின் சுடரும்
நில்லாமல் ஓடும் தென்றல் காற்றும்
நிஜமாய் கலந்த வசந்த காலமும்
நிறைவாய் தந்திட வந்தது நிதமும்!
அன்பின் அடைக்கலம் தந்து அருள் ஒளி
அனைவருக்கும் தந்திட வந்தது தீபாவளி
அன்னையைப் போல் அரவணைப்பு மொழி
அளித்திட உடனே வந்தது தீப மொழி!
எல்லாருக்கும் வாழ்த்து வழங்கிட
எல்லா திசையிலும் மலர்ந்தது தீப ஒளி
எங்கும் நலம் விசாரித்திட அன்பு மொழி
ஏந்தி வந்தது இங்கு ஒரு தீபாவளி!
மலரின் சுகந்த மணம் தந்திட
மன்னரின் மகிழ்ச்சி மனதில் படர்ந்திட
மகோன்னத சந்தோஷம் யாவரும் பெற்றிட
மலர்ந்து வந்தது அன்பின் தீபாவளி!
ரஜகை நிலவன், மும்பை