
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னஞ் சிறிய
குண்டூசி பல
தாள்களை இணைக்கிறது!
சிறிய ரப்பர் பேண்ட்
பல முடிக் கற்றைகளை
பறக்க விடாமல்
ஒருங்கிணைக்கிறது!
ஒரு துளி மை
பல பக்கங்களில்
தடையில்லாமல்
எழுதி விடுகிறது!
ஒரு குவளை தண்ணீர்
தொட்டிச் செடியை
மலர வைக்கிறது!
ஒரு பருக்கை சாதம்
பல எறும்புகளின்
பசி போக்கும்
வாழ்வாதாரமாகிறது!
ஒரு ஊசி மருந்து
பல நோய்களை
கட்டுப்படுத்தி
குணப்படுத்துகிறது!
இரண்டடி குறள்
காலமெல்லாம் மனித
வாழ்வியலுக்கு
பாடம் நடத்துகிறது!
கனிவான வார்த்தைகளும்
கள்ளமில்லா செயல்களும்
நல்ல எண்ணங்களும்
தேவையான அறிவுரைகளும்
உங்கள் சுற்றம் நட்பு
வட்டத்தில் உங்களை
மா மனிதர் எனும் நற்பெயரை
சொந்தமாக்கி விடும்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.தொடர்புக்கு : 94445 85858