
செப்டம்பர் 22, 1539 - சீக்கிய மதத் தலைவர், குருநானக் நினைவு நாள்
1735 - இந்த ஆண்டில் தான் பிரிட்டிஷ் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டது. முதல் பிரதமர் ராபர்ட் வால் போல், 10, டவுனிங் தெருவின் மதிப்பு மிக்க முகவரியில் குடியேறினார்.
1791 - இயற்பியலாளர் மற்றும் வேதியலாளரான, மைக்கல் பாரடே பிறந்த நாள்
1914 - ஜெர்மனியின், எம்டன் கப்பல், இரவு 9.30 மணிக்கு சென்னை துறைமுகத்தையும், மற்ற நகர பகுதிகளையும் குண்டு வீசி தாக்கியது. மொத்தம், 100 குண்டுகள் வீசப்பட்டன.
1916 - தமிழ் எழுத்தாளர், விந்தன் பிறந்த நாள்
1930 - பிரபல பின்னணி பாடகர், பி.பி. ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள்.
1931 - எழுத்தாளர் அசோக மித்திரன் பிறந்த நாள்.
1965 - ஐ.நா., விடுத்த போர் நிறுத்த அறிவிப்பை ஏற்று, இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் போரை நிறுத்தின.
1980 - ஈரான், ஈராக் மீது படையெடுத்தது. இந்த போர், எட்டு ஆண்டுகள் தொடர்ந்தது.