
முளை கட்டிய கேழ்வரகு, கொண்டைக்கடலை, பயறு, கோதுமை, பட்டாணி முதலிய தானியங்களை சுண்டலாக செய்தோ அல்லது மாவாக அரைத்து கஞ்சியாக செய்து கொடுத்தாலோ வளரும் குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும், புஷ்டியும் கிடைக்கும்
உருளைக்கிழங்கு மலிவாக கிடைக்கும் காலங்களில் நிறைய வாங்கி, மெல்லிய வட்ட துண்டுகளாக சீவி, உப்பு தண்ணீரில் வேக வைத்து, தண்ணீரை வடித்து வெயிலில் உலர்த்தி எடுக்கவும். இதை, தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து, மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
கீரை மற்றும் முட்டைக்கோஸ் பொரியல் அதிகமாக மீந்து விட்டால், கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பக்கோடாவாக செய்து பயன்படுத்தலாம்.
தோசை மாவில் கரண்டியை போட்டு வைத்தால், புளித்து போய் விடும்.
பிரிஜ் இல்லாதவர்கள், மாவுக்கு உப்பை போடாமல் வைத்திருந்து, தேவையான அளவு எடுத்து உப்பு சேர்த்து கரைத்து, தோசை வார்க்கலாம். தோசை மாவு புளித்திருந்தால் சிறிதளவு சாதத்தை மிக்சியில் அரைத்து மாவுடன் கரைத்து கொள்ளலாம்.
ரொம்ப புளித்த மாவுடன் வெங்காயம், இஞ்சி, கீரை இவைகளை நறுக்கி சேர்த்து ஊத்தப்பம் செய்யலாம் அல்லது எண்ணெயில் உருட்டிபோட்டு போண்டாவாகவும் செய்யலாம்.