PUBLISHED ON : செப் 22, 2024

கொள்ளையர்கள் கொடி கட்டி பறந்த, சம்பல் காடுகளுக்குள், முன்பு, நுாற்றுக்கணக்கான கோவில்கள் இருந்தன. ஆனால், கொள்ளையர்களுக்கு பயந்து, பக்தர்கள் யாரும் காட்டுப் பக்கம் தலை காட்டவில்லை.
அங்கு, மிகவும் பழமையான, அழகிய கோவில்கள் இருப்பதை கண்ட, கேரளாவை சேர்ந்த தொல்லியல் நிபுணர், பத்மஸ்ரீ கே.கே.முகமது, 'எப்படியாவது இந்த அறிய பொக்கிஷங்களை மீட்டு எடுக்க வேண்டும்...' என, களத்தில் குதித்தார்.
முதல் வேலையாக, கொள்ளையர் களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு, அவர்கள் உதவியுடன் கோவில்களை புதுப்பிக்கும் பணிகளை துவங்கினார்.
மத்தியபிரதேச மாநிலம், குவாலியரிலிருந்து, 35 கி.மீ., தொலைவில், 25 ஏக்கரில் அடர்ந்த சாம்பல் காடு இருக்கிறது. முகமது தலைமையில் ஏராளமான சிற்பிகளும், கட்டட வல்லுனர்களும் சேர்ந்து, மீண்டும் கோவில்களை புதுப்பித்து வருகின்றனர்.
— ஜோல்னாபையன்