
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அக்டோபர் 6, 1889 தான்சானியாவின் பிரபல சிகரம் கிளிமஞ்சாரோ முதன் முதலாக, மனிதனால் ஏறப்பட்டது.
1892 பிரபல ஆங்கில கவிஞர் டென்னிசன் நினைவு நாள்.
1903 - ஆஸ்திரேலியாவில் நீதிமன்றம் இயங்க ஆரம்பித்தது.
1927 - அல்ஜோல்சன் நடித்த, தி ஜாஸ் சிங்கர் என்ற, உலகின் முதல் பேசும் படம் வெளி வந்தது.
1928 பிரபல வயலின் வித்வான், டி.என்.கிருஷ்ணன் பிறந்த நாள்.
1935 தமிழக கவிஞர், புலமை பித்தன் பிறந்த நாள்.
1940 நடிகை சுகுமாரி பிறந்த நாள்.
1946 ஹிந்தி நடிகர், வினோத் கண்ணா பிறந்த நாள்.
1977 மிக்29 விமானம், முதல் பயணத்தை மேற்கொண்டது.
1979 போப் இரண்டாம் ஜான்பால், அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாமெரிக்கு சென்றார். வெள்ளை மாளிகை சென்ற, முதல் போப் அவர் தான்.
1981 எகிப்து அதிபர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான, அன்வர் சதாத், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.