
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிசம்பர், 1, 1878 - அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில், முதன் முதலில் தொலைபேசி நிறுவப்பட்டது.
* 1901 - தமிழ் புதின எழுத்தாளர், வை.மு.கோதை நாயகி அம்மாள் பிறந்த நாள்.
* 1953 - 'பிளேபாய்' இதழின் முதல் இதழ் வெளிவந்தது. இதில், நடிகை மர்லின் மன்றோ படம் இடம் பெற்றிருந்தது.
* 1954 - இந்திய சமூக ஆர்வலர், மேதா பட்கர் பிறந்த நாள்.
* 1959 - அண்டார்டிகா கண்டத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், அக்கண்டத்தை, அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* 1963 - நாகாலாந்து இந்தியாவின், 16வது மாநிலமாக உதயமானது.
* 1988 - பாகிஸ்தானின் பிரதமரானார், பெனாசிர் புட்டோ.
சிறப்பு நாள்: உலக எய்ட்ஸ் தினம்.