sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - கத்தரிக்காய்

/

நம்மிடமே இருக்கு மருந்து - கத்தரிக்காய்

நம்மிடமே இருக்கு மருந்து - கத்தரிக்காய்

நம்மிடமே இருக்கு மருந்து - கத்தரிக்காய்


PUBLISHED ON : ஜூலை 28, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தரிக்காய் எல்லா இடங்களிலும் சுலபமாக வளரும் காய் என்பதால், அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். கத்தரிக்காயில், 'சோலாசோடின்' எனும் ரசாயனம் உள்ளது. மாரடைப்பு மற்றும் கல்லீரல் வீக்கத்தை தவிர்க்க வழங்கப்படும் மாத்திரைகளில், இந்த ரசாயனம் தான் உள்ளது.

கத்தரிக்காயின் நிறத்திற்கு ஏற்றாற்போல, ஆரோக்கிய பண்புகளும் மாறுபடும். கத்தரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளன. இதைத்தவிர, மாங்கனீசு, வைட்டமின் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்னைகளையும் குறைக்கிறது. நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது.

ஊதா நிற கத்தரிக்காய் சாப்பிடுவதால், நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இதிலுள்ள பாலிபினால்கள், புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. கட்டி வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்கள் படையெடுப்பதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோயை நிர்வகிப்பதிலும், அதை கட்டுப்படுத்துவதிலும் கத்தரிக்காய்க்கு பங்குள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதய நோய் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

ஆன்டி ஆக்சிடண்ட் மட்டுமல்ல, நீல கத்தரிக்காயில் வலி நிவாரண குணமும் இருக்கிறது. அதேபோல, அதிக காய்ச்சலை குறைக்கிறது. வீக்கத்தைக் குறைக்கும் திறன், ஆஸ்துமா எதிர்ப்பு, கொழுப்பைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, செரிமானத்துக்கு உதவுவது என, இதில் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.

பச்சை நிற கத்தரிக்காயை சாப்பிடுவதால் வாயு பிரச்னை, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை இருக்காது. எனவே, உங்கள் வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தால், பச்சை கத்தரிக்காயை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

பச்சை நிற கத்தரிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, பருவகால நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

வெள்ளை நிற கத்தரிக்காய், குறைந்த கலோரி கொண்டது. நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள, 'அந்தோசயினிகள்' ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது.

இதயநோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கிறது.

உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. மழை காலத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்க கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

உடம்பின் தன்மைக்கு ஒத்துப்போகாமல் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்குகிறது.

உடம்பில் சொறி, சிரங்கு, புண் உள்ளோர், கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

கே. ராஜ்






      Dinamalar
      Follow us