/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!
/
நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!
PUBLISHED ON : பிப் 23, 2025

வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த, நீர் காய், சுரைக்காய். இனிப்பு, கசப்பு என, இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.
* ஆண்மைக் குறைபாட்டை நீக்க சிறந்தது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தை துாண்டும். மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. உடலின் வெப்ப நிலை, பித்தத்தை சமநிலைப்படுத்தும். இதை, பித்த சமனி என்பர்
* கை, கால்களில் குறிப்பாக பாதங்களில் எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டினால் குணமாகும்
* தினமும் சுரைக்காய் சாறு அருந்தி வந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக் கூடிய எரிச்சல் குணமாகும்
* குழந்தை பிறந்த பெண்கள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்
* சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு, குளிர்ச்சியும் ஏற்படும்
* சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து, நெற்றியில் தடவி வர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து, நெற்றியில் கட்டினால் தலைவலி நீங்கும்
* சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்துாள் மற்றும் உப்பு கலந்து, சாலட் செய்து சாப்பிடலாம்
* சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்து வைத்துக் குடித்தால், தாகம் குறையும். அந்த தண்ணீரில் வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கும். இந்த நீரில், தேனை ஒரு பாத்திரத்தில் வைத்து பாதுகாத்து, சாப்பிட்டு வரலாம்
* சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால், நீர் நோய்கள் நீங்கும்
* உடலில் ஏற்படும் வீக்கம், நீரேற்ற நோய்களையும் குறைக்கும்
* சுரைக்காய் இலையுடன் தண்ணீர் சேர்த்து, கஷாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.
- அமுதா அசோக்ராஜா