PUBLISHED ON : ஆக 25, 2024

கோகுலத்து வீதியில், கிழவி ஒருத்தி, நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு பிடி அரிசிக்கு ஒரு பிடி நாவல் பழம் என்று விற்றுக் கொண்டிருந்தவளை நோக்கி, தளிர் நடை போட்டு வந்தான், குழந்தை கண்ணன்.
பிடி அரிசி எடுத்து வந்தான், கண்ணன். ஆனால், வழிநெடுக அரிசி சிந்திக் கொண்டே வந்ததால், மூதாட்டி அருகில் வந்து சேர்ந்தபோது, அவன் கையில் ஒன்றுமே இல்லை. பாட்டியை பாவமாக பார்த்தான், கண்ணன்.
அந்த ஏழை மூதாட்டி, தயங்காமல் நாவல் பழத்தை அள்ளிக் கொடுத்தாள். வீடு திரும்பும்போது, கண்ணனால், வீதியில் சிந்தியிருந்த அரிசியை சேகரித்து கூடையில் போட்டுக் கொண்டாள். வீட்டிற்கு வந்ததும், கூடையை அவள் திறந்து பார்த்தபோது நகைகளும், பொற்காசுகளும் ஜொலித்தன.
கண்ணனின் கருணையை நினைத்து மெய்யுருகி போனாள், பாட்டி. இதை நினைவுபடுத்தும் விதமாகவே, கிருஷ்ண ஜெயந்தி அன்று, நாவல் பழம் நைவேத்தியம் செய்கிறோம்.

