
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையனை, நடுரோட்டில் சரமாரியாக ஒருவர் அடிக்க, வலி தாங்க முடியாமல் கதறி அழுதான்.
இதைப் பார்த்த ஒருவர், வேகமாக ஓடிவந்து, 'யோவ், அவன் என்ன தப்பு பண்ணினான்... மாட்டை போட்டு அடிக்கிற மாதிரி அடிக்கிறே?' என்றார்.
'நான், அவனை அடிப்பேன். துாக்கிப் போட்டு மிதிப்பேன். அது என் இஷ்டம்... இவருக்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்யணுமோ?' என்றவர், மீண்டும் அடித்தார்.
'சும்மா கதை பேசாத. நடந்ததை சொல்லு...' என்றார், வந்தவர்.
'வயிற்றெரிச்சல கிளப்பாதய்யா. ஐந்தாயிரம் கட்டி கான்வென்டில் படிக்க வச்சா. இவனுக்கு சன்னுக்கும், மூனுக்கும் வித்தியாசம் தெரியலை...' என்றான்.
'யோவ், அவனுக்காவது சன்னுக்கும், மூனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் மகன் யாரு, என் மகன் யாருன்னு தெரியாம அடிக்கிறியே...' என்றார், வந்தவர்.
- புலவர் மா.ராமலிங்கம்