
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுத்தம் பருப்பு சிறிதளவு ஊறவைத்து அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்
* கோதுமையை நன்கு கழுவி, நான்கு மணி நேரம் ஊற வைத்து, உலர்த்தி அரைத்து வைக்கவும். இந்த மாவில் சப்பாத்தி செய்தால் மிகவும் மென்மையாக இருக்கும்
* புளிக்காத தயிர் சாதம் செய்ய வேண்டுமா... சாதத்தை நன்கு குழைய வடித்து, பால் விட்டு நன்கு பிசைந்து, ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்துக் கலக்க வேண்டும். உப்பை தனியாக எடுத்துச் சென்று, சாப்பிடும் போது சேர்க்க வேண்டும். இவ்வாறு உப்பு சேர்க்காமல் செய்தால், தயிர் சாதம் புளிக்கவே புளிக்காது.