
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரஸ்வதியை துதித்த பின்னர் தான், சப்த சாஸ்திரம் எனும் நுாலை இந்திரனுக்கு கற்பித்தார், பிருஹஸ்பதி.
* தேவியின் கடாட்சத்தை பெற்ற வியாசர், மகா பிரம்ம சூத்திரம், பதினென் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்.
* கல்வி ஞானமே இல்லாதிருந்த, காளிதாசருக்கு அம்பிகையின் பேரருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டார். இவருடைய நுால்களாகிய, ரகுவம்சம், மேக துாதம், சாகுந்தலம், குமார சம்பவம், சியாமளா தண்டகம் மற்றும் சியாமளா தந்திரம் போன்றவற்றில், தேவியின் சொரூபம் மற்றும் லீலைகளை காணலாம்.
* ஸ்ரீசரஸ்வதியான சாரதாம்பாளை, ஆதிசங்கரர் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். கல்வி தரும் கலைமகளான சாரதா, இன்னமும் தானே பயில்வது போன்றே, கரங்களில் ஜப மாலை, சுவடி மற்றும் ஞான முத்திரை கொண்டு திகழ்கிறாள்.