PUBLISHED ON : டிச 29, 2024

பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு புகழ் பெற்றது, சிவகாசி.
ஆடி மாதம் துவங்கும், புது ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி, தீபாவளிக்கு பின் வேகமெடுக்கும்.
கட்சி ஆர்டர்கள், வணிக நிறுவன ஆர்டர்கள் என, ஒன்றன் பின் ஒன்றாக வர, காலண்டர் தயாரிப்பு பணி, புத்தாண்டையும் தாண்டி, பொங்கல் வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும், அதே வேகத்தில் காலண்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் அச்சுத் தேவையை சிவகாசி, 70 சதவீதம் பூர்த்தி செய்கிறது. மேலும், இங்கு தயார் செய்யப்பட்டு வரும் காலண்டர்கள் தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், அவர்களின் வணிகத்திற்கு சிவகாசி காலண்டர்களை பயன்படுத்த விரும்புவதால், வெளிநாடுகளிலும் சிவகாசி காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- ஜோல்னாபையன்

