sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

/

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!


PUBLISHED ON : ஆக 24, 2025

Google News

PUBLISHED ON : ஆக 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழுக்கட்டை மேல் மாவு தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

மிஷினில் அரைத்த பச்சரிசி மாவு - ஒரு கப், உப்பு - சிட்டிகை அளவு, தண்ணீர் - அரை கப் அல்லது மாவின் தரம் பொறுத்து தண்ணீரின் அளவு மாறுபடும், நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி.

செய்முறை: அகலமான வாணலி, குக்கர், வெங்கல உருளி இதில் ஏதாவது ஒன்றில் நீர், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கொதி வருகையில் அடுப்பை அணைத்து, மாவு துாவி கட்டியின்றி கிளறவும். சற்றே ஆறிய பின், நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைத்து, ஈரத்துணியால் மூடிவைக்கவும். கொழுக்கட்டை சொப்புக்கான மேல் மாவு தயார்.

பஞ்சரத்ன கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - ஆறு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - இரண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - அரை தேக்கரண்டி, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - நான்கு தேக்கரண்டி, தேவையான அளவு - உப்பு.

செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக கலந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, பெருங்காயம் தாளித்து, வேகவைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.

சத்துமாவு கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்: கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் சத்துமாவு  - ஒன்றரை கப், தண்ணீர் - ஒன்றை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், ஏலக்காய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, நெய் - மூன்று தேக்கரண்டி, வெல்லத் துருவல் - ஒரு கப்.

செய்முறை: வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வெல்லத்துாளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு, ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும்.

மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட்டு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்துாள், சத்து மாவு சேர்த்து கிளறி, வெந்ததும் எடுக்கவும்.

கையில் நெய் தடவி, இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து பிடிக்கொழுக்கட்டையாக பிடிக்கவும். நெய் தடவிய இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில், 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - இரண்டு கப், மேல் மாவுக்கு நெய்- - ஒரு தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, நெய் பூரணத்துக்கு - ஒரு மேஜைக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வாணலியில் தண்ணீர், உப்பு, ஒரு தேக்கரண்டி நெய்விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து, பச்சரிசி மாவை அதில் துாவி, கட்டி தட்டாமல் கிளறவும். வாணலியை மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து, வாணலியைத் திறந்து நன்றாக கிளறி, மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, வாணலியை மூடி வைக்கவும்.

இன்னொரு வாணலியில் நெய்யை சூடாக்கி, தேங்காய்த்துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும். எல்லாம் சேர்ந்து வரும் போது ஏலக்காயத்துாள் போட்டுக் கலந்து இறக்கி வைக்கவும். இது தான் தேங்காய்ப் பூரணம்.

வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெய் தொட்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்யவும். நடுவில் தேங்காய் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும்.

இப்படி எல்லாவற்றையும் செய்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.



ஜவ்வரிசி - கீரை வடை!


தேவையான பொருட்கள்: மாவு ஜவ்வரிசி - இரண்டு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - இரண்டு மேஜைக்கரண்டி, சுத்தம் செய்து, நறுக்கிய அரைக்கீரை - அரை கப், மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்துாள் - கால் தேக்கரண்டி, சீரகத்துாள் - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் பொரிக்க - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயை சூடாக்கி, ஜவ்வரிசியை நன்றாக பொரியும் வரை வறுத்து எடுத்து, தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கீரை, மிளகாய்த்துாள், பெருங்காயத்துாள், சீரகத்துாள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போடவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

பச்சரிசி - தேங்காய் பாயசம்!

தேவையானவை: பச்சரிசி, தேங்காய்த் துருவல் - தலா கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு - சிறிதளவு நெய்யில் வறுத்து கொள்ளவும். நெய் - ஒரு தேக்கரண்டி, பால் - இரண்டு கப்.

செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அரிசியுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்த விழுதை போட்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும்

தீயை குறைத்து வைத்து, நன்றாக வெந்தவுடன் வெல்லத்தை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கொதி வந்தவுடன் பாலை ஊற்றிக் கலந்து இறக்கி, ஏலக்காய்த்துாள், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை சேர்க்கவும்.






      Dinamalar
      Follow us