
ஐந்தாயிரம் அரசுப் பணிக்கு
பத்து லட்சம் பேர்
தேர்வு எழுதுவது
பெருமையல்ல!
அரசு கட்டிய
குடியிருப்பு வீடுகள்
இருபத்தைந்து ஆண்டுகளில்
இடிந்து விழுவது
பெருமையல்ல!
மது வருமானத்தில்
இலவசங்களும்
சலுகைகளும் கொடுப்பது
பெருமையல்ல!
எதிர்த்து ஏசியவரையெல்லாம்
ஏலம் எடுத்து
கட்சியில் இணைத்துக்
கொள்வது பெருமையல்ல!
சின்னத்திரை பெரிய திரை
பார்த்து வன்முறை
கள்ளக்காதல் வளர்வது
பெருமையல்ல!
விபத்து மரணங்களுக்கு
லட்சங்கள் கொடுத்து
படம் எடுத்துக் கொள்வது
பெருமையல்ல!
வாரிசுகளை வளர்ப்பதும்
நேரம் பார்த்து
பதவிகள் அளிப்பதும்
பெருமையல்ல!
பெருமை எனப்படுவது
யாதெனில்...
மக்களை உழைத்து
உயரச் செய்ய!
வேலை வாய்ப்பை பெருக்கவும்
தொழில்கள் வளரவும்
விபத்துகளைக் குறைக்கவும்
மதுவை விலக்கியும்
தண்டனைகளை அதிகரித்தும்
ஓட்டுக்கு திட்டமிடாமல்
நாட்டுக்காக திட்டமிடுவதே
நிரந்தர பெருமையாகும்!
ஏ.வி.கிரி, தாம்பரம்.