sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 21, 2024

Google News

PUBLISHED ON : ஜன 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமேசான் காடுகளுக்கு சென்ற இயக்குனர்!

பாகுபலி, பாகுபலி- 2 மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது, மகேஷ்பாபு நடிப்பில், தன் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 'ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, அமேசான் காடுகளில் உள்ள, மரங்கள் அடர்ந்த பகுதிகளில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஹாலிவுட் சினிமாக்களில் பயன்படுத்தப்படும் சிறிய ரக, அதி நவீன கேமராக்களை, மரக்கிளைகளில் பொருத்தி வைத்து, புதுமையான முறையில், படப்பிடிப்பை நடத்தி வருகிறேன்...' என்கிறார், ராஜமவுலி.

 சினிமா பொன்னையா

த்ரிஷா வாய்ப்பை தட்டிப் பறித்த, சமந்தா!

ஷாருக்கான் ஜோடியாக, நயன்தாரா நடித்த, ஜவான் படத்தில், முதலில் நடிக்க இருந்தவர், சமந்தா தான். 'கால்ஷீட்' பிரச்னையால், அந்த படத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது, ஹிந்தியில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும், தி பூல் என்ற படத்தில் நடிக்க, த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது, அந்த வாய்ப்பை தட்டித் துாக்கி இருக்கிறார், சமந்தா. குறிப்பாக, தெலுங்கில் வெளியான, புஷ்பா படத்தில், சமந்தா நடனமாடிய, 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடல், வட மாநிலங்களில் பெரிய, 'ஹிட்' அடித்தது. இதன் காரணமாகவே, சமந்தா எடுத்த முயற்சி, உடனடியாக, 'ஒர்க் - அவுட்' ஆகி இருக்கிறது.

எலீசா

பிகினிக்கு மாறிய, துஷாரா விஜயன்!

சார்பட்டா பரம்பரை மற்றும் அநீதி உள்ளிட்ட சில படங்களில் நடித்த, துஷாரா விஜயன், தற்போது, வேட்டையன் படத்தில், ரஜினிக்கு மகளாக நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து, தன் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும். அதற்கு, அடுத்தபடியாக, 'பிகினி' நடிகையாக உருவெடுக்க, சில புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 'பாலிவுட் சினிமாவிலும், 'என்ட்ரி' கொடுத்து, சூட்டை கிளப்ப போகிறேன்...' என்று, கூறுகிறார்.

— எலீசா

சூரியின் 'ஆக் ஷன்' அவதாரம்!

வெற்றிமாறன் இயக்கிய, விடுதலை படத்தில், 'ஹீரோ'வாக உருவெடுத்த, புரோட்டா சூரி, அதையடுத்து, கொட்டுக்காளி மற்றும் கருடன் என, இரண்டு படங்களில், 'ஹீரோ'வாக நடித்து முடித்திருக்கிறார். இதில், 'கருடன் படத்தில், அதிரடி, 'ஆக் ஷன்' வேடத்தில் நடித்துள்ளதோடு, 'ஹாலிவுட் ஹீரோ'கள் பாணியில், 'சிக்ஸ்பேக் கெட் - அப்'புக்கு மாறி, நடித்துள்ளேன். மேலும், ஏதாவது வித்தியாசம் காட்டி, ரசிகர்களை என் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக, ஒரு புதுமையான அடிமுறை மற்றும், 'சவுண்ட் எபெக்ட்' மட்டுமே, சண்டை காட்சிகளுக்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டுள்ளது...' என்கிறார், சூரி.

சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

எஜமான் நடிகையின் கணவர் இறந்ததை அடுத்து, மீண்டும், சினிமாவில் தற்போது, 'என்ட்ரி' கொடுத்துள்ளார். 40 வயசுக்கு பிறகும், அம்மணி இளமையாக இருப்பதை பார்த்த சில கோலிவுட், 'ஹீரோ'கள், அவரை மறுமணம் செய்து கொள்ள, கல் எறிந்து வந்தனர். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டோர், தன்னை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வந்ததையடுத்து, 'இப்போதைக்கு, எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை...' என்று சொல்லி, தன்னை விரட்டி வந்த நடிகர்களை, துரத்தி அடித்து விட்டார், அம்மணி.

சினி துளிகள்!

* கணவர் இறப்புக்கு பின், மீண்டும் தமிழ், மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் மீனா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us