PUBLISHED ON : மார் 31, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கை நிறைய
மாதச் சம்பளம்
ஏராளமான
சலுகைகள்
மக்கள் பிரதிநிதிகளுக்கு!
எல்லா அவைகளிலும்
கூச்சல், குழப்பம்
சண்டை, தள்ளுமுள்ளு
போராட்டங்கள்!
இன்றைய ஆட்சியாளர்கள்
நேற்றைய
எதிர்க்கட்சியினர்
இன்றைய எதிர்க்கட்சியினர்
நேற்றைய
ஆளும் கட்சியினர்!
மாறி மாறி
லஞ்சம் ஊழல் பற்றி
குற்றம் சாட்டிக்
கொள்கின்றனர்
யார் யோக்கியர் என்று!
அவையை
நடத்த முடியாமல்
அடிக்கடி தொடர்ந்து
சபையை ஒத்தி வைக்கிறார்
சபாநாயகர்!
மன்னிப்பு
கேட்க வேண்டும்
என்கின்றனர்
இரு அணியினரும்!
இவர்களை எல்லாம்
தேர்ந்தெடுத்து அனுப்பிய
மக்களுக்குத்தான்
தெரியவில்லை
யாரிடம் மன்னிப்பு
கேட்பது என்று!
— சொல்கேளான் ஏ.வி. கிரி, சென்னை.