sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 07, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க. கதிரேசன், சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டு அளிப்பதில், மிகவும் குழப்பமாக உள்ளது. சிறந்த கட்சி மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது எப்படி?

ஊழல் இல்லாத கட்சி என்று மக்களால் எது போற்றப்படுகிறதோ, அந்தக் கட்சிக்கே ஓட்டளியுங்கள். இதில் குழப்பமே வேண்டாம்!

* ஆர். நாகராஜ், மதுரை: ஒரு பத்திரிகைக்கு, வாசகர் என்பவர் யார்? பணம் கொடுத்து பத்திரிகை வாங்கி படிப்பவர்களா அல்லது டீ கடை, நுாலகம் போன்ற இடங்களில் இலவசமாக படிப்பவர்களா?

எங்கு படித்தாலும், வாசகர்களே, பத்திரிகைகளின் முதலாளிகள்!



ஆர். ரவி, திருப்பூர்: என் நண்பன், பசிக்காத போதும் எதையாவது தின்கிறானே...

தனக்குத் தானே சவக்குழி பறித்துக் கொள்கிறார் என்பதே அர்த்தம்!

            

ஜெ. குமார், கன்னியாகுமரி: நான் விரும்புவதை எல்லாம் வாங்கக் கூடாது என்கிறாளே, என் மனைவி... இது சரிதானா?

சரி தான்! உங்களுக்கு எது தேவையோ, அதை மட்டுமே வாங்குங்கள். உங்கள் மனைவி, அதிபுத்திசாலி என்பதில் சந்தேகமில்லை!

* எஸ். சரவணன், மதுரை: நான் நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?

நிறைய சம்பாதிக்க அறிவு வேண்டும்; சம்பாதித்ததை சேமிக்கவும், புத்தி வேண்டும்; சேமித்ததை சரியான முறையில் செலவழிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். செய்வீர்கள் தானே!

            

க. வினாயகம், நெல்லை: அன்பர்கள், நண்பர்கள், தோழர்கள் என்பவர்கள் யார்?

அன்பர்கள், கை குலுக்குவர்; நண்பர்கள், கை கொடுப்பர்; தோழர்கள், தோளில் ஏற்றி துாக்கி விடுவர். இவர்களில் எந்த வகை என்பதை, நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!

எம். லதா, செங்கல்பட்டு: தலைக்கனம் என்றால் என்ன?

தலைக்கனம் இரண்டு வகைப்படும்... முதல் வகை, தன்னைப் பெரிதாக நினைத்துக் கொள்வது; அடுத்த வகை, பிறரைத் தாழ்வாக நினைப்பது. இரண்டு வகைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை!






      Dinamalar
      Follow us