PUBLISHED ON : மே 12, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாற்பது வயது ஆனாலே முதுமை வந்துவிட்டதே என, முடங்கி கிடக்கும் மனிதர்கள் மத்தியில், படத்தில் இருக்கும் மாதவி, சற்று மாறுபட்டு இருக்கிறார். 96 வயதிலும், காலை, 4:00 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து, உடலை கச்சிதமாக வைத்துள்ளார்.
சிறு வயதில் ஆரம்பித்த களரி பயிற்சி இன்றும் தொடர்கிறது. 11 குழந்தைகளை பெற்ற தாய் இன்றும் இளமையுடன் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சி தான் என்பதில் சந்தேகமில்லை. கேரள மாநிலம், கண்ணுார், நெல்லிக்கா கிராமத்தை சேர்ந்த மாதவி பாட்டி, அனைவரையும் வியக்க வைக்கிறார்.
ஜோல்னாபையன்