sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 26, 2024

Google News

PUBLISHED ON : மே 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எஸ். மனோகரன், சென்னை: என் குடும்பம் உயர்ந்து நிற்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?

விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இந்த இரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுவோரின் குடும்பம் உயர்வடையும்!

க. செங்கமலதேவி, திருச்சி: பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் குரல் மிக பொருத்தமாக இருப்பது, எம்.ஜி.ஆருக்கா, சிவாஜிக்கா?

எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்குமே பொருத்தமாக இருக்கும். ஆனால், எம்.ஜி.ஆருக்கு மிகவும் இணைப்பாக இருக்கும்



* மு. இசக்கி, சென்னை: இரவு துாங்கப் போகும் முன், பழைய சினிமா பாடல்களை கேட்கலாமா?


ஓ... தாராளமாக... 'கேரவன்' என்ற இசைக்கருவி ஒன்று உள்ளது. அதில், 5,000 சினிமா பாடல்கள் உள்ளன. அதுபோக, நடுவில், 'டிவோஷனல்' என்ற, 'சுவிட்சும்' கடைசியாக, 'கர்நாட்டிக்' என்ற, 'சுவிட்சும்' உள்ளது. எது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். நாம் வாங்கக் கூடிய விலையில் தான், 'கேரவன்' உள்ளது!

டி.கே. சுகுமாரன், கோவை: அந்துமணி அவர்களே... நீங்கள், பத்திரிகைத் துறைக்கு வர முக்கிய காரணம்?

என் தாத்தாவும், அப்பாவும் பத்திரிகையாளர்கள் தான். அதனால், நானும், எம்.ஏ.,'ஜர்னலிசம்' சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தேன். பின்பு, பத்திரிகையாளர் ஆகி விட்டேன்!

வே. முருகேசன், திண்டுக்கல்: என் வயது, 63. 30 ஆண்டுகளாக, வாரமலர் இதழின் வாசகர்; வாரம் தவறாமல் படைப்புகள் அனுப்புகிறேன்; இதுவரை எந்த படைப்பும் பதிவாகவில்லை. 'எத்தனை ஆண்டுகளுக்கு, நீ படைப்புகளை அனுப்பினாலும், அது பிரசுரமாகாது...' என்று, கிண்டல் பண்ணுகின்றனர். என் பெயர், 'தினமலர் - வாரமலர்' இதழில் பதிவாக வேண்டும்; அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். என் ஆசை நிறைவேறுமா?

இன்று, உங்கள் பெயர் வெளியாகி விட்டது. உங்கள் ஆசை, நிறைவேறி விட்டது தானே!

டி. ஜெகந்த், குனியமுத்துார்: எந்த வகை உணவு, உமக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்?

இத்தாலி நாட்டின் உணவு வகைகள், எனக்கு ரொம்பவும் பிடிக்கும்; அதிலும், சைவ உணவுகள்!

எஸ். சிவராமன், மதுரை: என் லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்?

லட்சியத்தை அடைவதற்காக, கஷ்டம், நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்!






      Dinamalar
      Follow us