PUBLISHED ON : ஜூன் 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெகு நேரம் தண்ணீரில் மிதப்பது மற்றும் நீச்சலடிப்பது, 62 வயது டாக்டர் குஞ்சம்மா மேத்யூவின் வழக்கம். இவர் சமீபத்தில், 7 கி.மீ., துாரம் நீச்சலடித்து சாதனை புரிந்தார்.
கேரள மாநிலம், ஆலப்புழா வேம்பநாட்டு காயலில், தண்ணீரில் குதித்து, வைக்கம் நீர்த்தேக்கத்தில் தான் கரை ஏறினார்.
'பெண்களால் சாதிக்க முடியாது என்ற சிந்தனை சிலரிடம் இருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு இணையாக எதையும் செய்வோம் நாங்கள் என நிரூபித்து காட்டவே, இந்த முயற்சி செய்தேன். அடுத்ததாக, இதை விட அதிக துாரம் நீச்சலடித்து சாதனை ஏற்படுத்துவது தான் என் லட்சியம்...' என்கிறார், குஞ்சம்மா மேத்யூ.
— ஜோல்னாபையன்