PUBLISHED ON : ஜூன் 09, 2024

'ஷிப் ரீ சைக்கிளிங் யார்டு' என்றால், பழைய கப்பல்களை உடைத்து, காயலான் கடைக்கு அனுப்பும் தொழில் நடக்கும் இடம் என்று அர்த்தம். இதுபோன்ற பட்டறைகள் உலகில் மூன்று நாடுகளில் தான் இருக்கின்றன.
இந்த தொழில், சுற்று சூழலை பாதிக்கும் என்பதால், ஐரோப்பிய நாடுகள், இந்த வியாபாரம் செய்ய முன் வருவதில்லை. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் துருக்கி போன்ற இடங்களில் தான், இந்த தொழில்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவில், குஜராத் மாநிலம் பாவன நகரில், 1983ல், கப்பல் உடைக்கும் பணி ஆரம்பமானது. இன்று இங்கே, 14 கி.மீ., பரப்பளவில், 183 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த வேலையில் நேரடியாக, 1 லட்சம் பேரும், இதன் சார்புடைய இதர வேலைகளில், 2 லட்சம் பேரும் பணியாற்றுகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு, 200 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன.
கப்பலில் உள்ள அனைத்து பொருட்களையும், இங்குள்ள காயலான் கடைகளிலிருந்து மலிவு விலையில் வாங்கலாம்.
— ஜோல்னாபையன்