/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடம் இருக்கு மருந்து - கரிசலாங்கண்ணி!
/
நம்மிடம் இருக்கு மருந்து - கரிசலாங்கண்ணி!
PUBLISHED ON : மார் 24, 2019

கரிசலாங்கண்ணி சாறை, தினமும் தலையில் பூசி, சிறிது நேரம் வைத்திருந்து குளித்தால், இளமையில் தலை வழுக்கை நீங்கி, முடி வளரும்; இளநரையும் மாறும்.
* மஞ்சள் காமாலை நோய் உள்ளோர், இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதன் சாறை, காலை - மாலை ஏழு நாட்களுக்கு சாப்பிட்டால், நோய் குணமாகும். இதை சாப்பிடுவது, தலைமுடிக்கும், முகப்பொலிவிற்கும் மிகச் சிறந்தது. வாரம் ஒரு முறையாவது, இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியமும், அழகும் மேம்படும்
* கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது, இது. இரும்புசத்து அதிகம் உள்ளது. பல், ஈறு சம்பந்தமான நோய் அண்டாது; முடி நரைக்காது; ரத்தம் சுத்தமடையும். மது, சிகரெட் நச்சை, உடலில் இருந்து நீக்கும்
* கரிசலாங்கண்ணி, சீரகம், துாதுவளை, முசுமுசுக்கை ஆகிய நான்கையும் பொடித்து, சூரணமாக்கி, கொள்ள வேண்டும். ஒரு டம்பளர் பாலில், சூரணத்தை, ஒரு ஸ்பூன் போட்டு காய்ச்சி, அரை டம்பளராக சுண்ட வைக்க வேண்டும். அதில், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், பனங்கற்கண்டு என, ஏதாவது ஒன்றை சேர்த்து, தினமும் அருந்தி வந்தால், உடல் வலுவடையும்; எந்த நோயும் அணுகாது
* இதன் இலை சாறுடன், சோற்று கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாக சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்கு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, சுண்ட வைத்து, வடிகட்ட வேண்டும். இந்த தைலத்தை தேய்த்து தலைக்கு குளித்து வர, கண் பார்வை தெளிவடையும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.
- பொ.பாலாஜி கணேஷ்

