PUBLISHED ON : ஆக 20, 2023

அ நிறம் | அளவு
சாதாரணமாக, வெறும் காலிலோ அல்லது ஷூ அணிந்து கொண்டோ ஓடுவது கடினமானது. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டியன் ராபர்ட்டோ லோபஸ் ரொட்ரிக்ஸ் என்பவர், 'ஹை ஹீல்ஸ்' அணிந்து, 100 மீட்டர் துாரம் ஓடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர், 2.76 அங்குலம் உயரமான, 'ஹை ஹீல்ஸ்' அணிந்து, 100 மீ., துாரத்தை, 12.82 விநாடிகளில், ஓடி, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்தவர், ரொட்ரிக்ஸ். ஜெர்மனியைச் சேர்ந்த, ஆன்ட்ரே ஓர் டோர்ஸ், 2019ல், 14.02 விநாடிகளில் ஓடியதே, 'ஹை ஹீல்ஸ்' ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை, இவர் முறியடித்துள்ளார்.
— ஜோல்னாபையன்
