தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்லவர்கள் தவறு செய்தால்!

நல்லவர்கள் தவறு செய்தால்!

நல்லவர்கள் தவறு செய்தால்!


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எனக்கு அன்னியரல்லாதாராய், என்னையே நினைத்து, என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய, யோக ஷேமத்தை, நான் வழங்குகிறேன்...' என்கிறது, பகவத் கீதை.

ராமாவதாரத்தில் தான் செய்த செயல்களையே, கிருஷ்ணாவதாரத்தில் கீதையில் கூறி, தானே உலகுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார், பகவான் கிருஷ்ணன்.

ஒரு சமயம், வேதியர் சிலர், விபீஷணனை சிறைப்படுத்தி வைத்திருப்பதாக, ஸ்ரீராமருக்கு தகவல் வர, தன் தூதர்களை அனுப்பி எல்லா இடங்களிலும் தேடச் சொன்னார். ஒரு வழியாக, விபீஷணர் இருக்கும் இடம் தெரிந்ததும், அங்கு சென்ற ஸ்ரீராமர், விபீஷணன் கை, கால்கள் கட்டப்பட்டு, பாதாள சிறையில் இருந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த வேதியர்களிடம், 'விபீஷணன் செய்த குற்றம் என்ன?' என கேட்டார்.

வேதியர்கள், நடந்ததை கூறினர்...

'முதிய வேதியர் ஒருவர், தர்ப்பை புல் கொண்டு வருவதற்காக, காட்டிற்கு சென்றார். அவர், மவுன விரதத்தை கடைப்பிடிப்பவர். அப்போது, அவ்வழியே வந்த விபீஷணர், முதியவரிடம் ஏதோ வினவ, மவுன விரதம் இருந்ததால், அவர் பதில் சொல்லவில்லை.

'இதனால், கோபமடைந்த விபீஷணர், 'நான் கேட்கிறேன்... பதில் சொல்லாமல் இருக்கிறாயா...' என்று கேட்டு, அவரை எட்டி உதைத்தார்.

'வயதானவர் என்பதால், விபீஷணரின் பலமான உதையில், கீழே விழுந்து, உயிர் துறந்தார், அந்த வேதியர். இதை அறிந்த ஆசிரமவாசிகளான நாங்கள் விபீஷணரை பிடித்து, தண்டனை அளிக்க தீர்மானித்தோம்...' என்று கூறி, 'ராமா... நாங்கள் எவ்வளவோ தண்டித்தும், இவன் உயிர் போகவில்லை. நல்லவேளை, நீங்கள் வந்தீர்கள்; இவனை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும்....' என, வேண்டினர்.

அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்ட விபீஷணர், ஸ்ரீராமர் முன், தலைகுனிந்து நின்றார்.

ஸ்ரீராமரோ, 'ஆசிரமவாசிகளே... வேலைக்காரன் தவறு செய்தால், அதற்கு, எஜமானன் தான் பொறுப்பாளி ஆகிறான். இந்த விபீஷணனுக்கு சாகா வரம் தந்து, இலங்கா நகரத்தை ஆளும் வரமும் தந்தது, நான் தான். இவர் என்னைச் சேர்ந்தவர்; ஆகவே, இவர் செய்த குற்றம், நான் செய்ததை போல தான். இவருக்கு என்ன தண்டனை அளிக்க தீர்மானித்தீர்களோ, அதை, எனக்கு கொடுங்கள்...' என, வேண்டினார்.

அதை கேட்டதும், ஆசிரமவாசிகள், 'விபீஷணன் வேண்டுமென்றே இத்தவறை செய்யவில்லை; தன்னையறியாமல் தான் செய்துள்ளான். அதற்காக, பிராயச்சித்தம் செய்தால் போதும்...' என தீர்மானித்தனர்.

தன் பக்தனுக்காக, பிராயச்சித்தம் செய்து, விபீஷணரை விடுவித்தார், ஸ்ரீராமர்.

நல்லவர்கள் கூட, சில சமயங்களில் தங்களை மறந்து, தவறு செய்து விடுகின்றனர். அத்தகையோருக்கு தெய்வமே உடன் வந்து காத்து, அருள் புரியும் என்பதை விளக்கும் கதை இது!

பி.என். பரசுராமன்

தெரிந்ததும், தெரியாததும்

ஆரத்தி எடுப்பதன் காரணம் என்ன?

ஒரு தாம்பாளத்தில், தண்ணீரில் மஞ்சளும் சிறிது சுண்ணாம்பும் கலந்து, அத்தாம்பாளத்தின் இரு பக்கங்களிலும், இரண்டு தீபச்சுடர் எழுப்பி, சம்பந்தப்பட்ட நபரை, மூன்று முறை சுற்றுவதையே, ஆரத்தி என்கிறோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு, கிருமிகளை அழிக்கும் திறனுண்டு. விஷ கிருமிகளை விரட்டுவதற்கே, ஆரத்தி எடுக்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us