தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது!

சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது!

சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயிரம் ஆண்டுகளாகவே சபரிமலையில், பெண்களை அனுமதிப்பதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன், 1816ல், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, பெஞ்சமின் ஸ்பயன் பர்டு மற்றும் பீட்டர் அயர் கார்னர் என்ற ஆங்கிலேய ஆய்வாளர்கள், திருவிதாங்கூர் - கொச்சி மாகாணங்களில் கள ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

மக்களின் கலாசாரம் பாரம்பரியத்தை, 'மெமோர் ஆப் தி சர்வே ஆப் தி திருவிதாங்கூர் அண்டு கொச்சி ஸ்டேட்ஸ்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதில், சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை, தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். பூப்பெய்தலுக்கு முன் மற்றும் பேரிளம் பெண்ணான பின் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக, பதிவு செய்துள்ளனர். கேரள அரசும் இதை அங்கீகரித்து, முக்கிய சாசனமாக ஏற்றுள்ளது.

ஒரு பெண்ணின் கருமுட்டை, மாதவிடாய் மூலம் வெளி வரத்துவங்கிய நாட்களில் இருந்து, அது நின்று போகும் காலம் வரை அனுமதி இல்லை. இது, அவர்களது மாதவிடாய் காலம்.

சரி... மாதவிடாய் என்றால் என்ன என்று பார்ப்போம்...

பெண்களுக்கு இரண்டு கருமுட்டை பை உள்ளது. இதில், ஒவ்வொரு மாதமும் வலது பக்கம் இருந்து ஒரு கருமுட்டையும், இடது பக்கம் இருந்து ஒரு கருமுட்டையும் வெளியேறும்.

இந்த கருமுட்டை பையில், 14 நாட்கள் வளர்கிறது. பின், கருமுட்டை குழாய் வழியாக கர்ப்பப்பையை, ஏழு நாட்களில் அடைகிறது.

இந்த கருமுட்டையை வரவேற்று வளர்க்க, தன் உடலில் உள்ள சத்துக்களை எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து கர்ப்பப்பை வரவேற்கிறது. இந்த காலத்திக்கு முட்டை, ஆண் விந்தணுவுடன் சேரவில்லை எனில், சிவப்பு கம்பளத்துடன் அந்த கருமுட்டை, ஏழு நாட்களில் வெளியேறும்.

ஆக மொத்தம், 14 + 7+ 7 = 28 நாட்கள். ஆகவே தான், 28 நாட்களுக்கு ஒரு முறை, 3 நாட்கள் மாதவிடாய் காலமாக உள்ளது.

பெண்களை நிலவுடன் ஒப்பிடுவர். நிலவும், மாதத்தில், 28 நாட்கள் மட்டுமே தெரியும். நிலவின் ஒளி, கர்ப்பப்பையை வலுவடையச் செய்யும்.

மாதவிடாய் காலத்தில், எப்படி இருக்க வேண்டும் என, பெண்களுக்கு சில வழிமுறைகளை வகுத்துள்ளனர், நம் முன்னோர்.

இந்த காலத்தில் பெண்கள், காந்தம் போன்றவர்களாய் மாறுவர். இவர்களின் பிராண சக்தி முழுவதும், கழிவுகளை வெளித்தள்ள மூலாதாரத்தை நோக்கியே செயல்படும். அந்த மூன்று நாட்கள் இவர்கள், தம்மை சுற்றி உள்ள நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்திகளை எளிதாக ஈர்க்கும் தன்மை ஏற்படும். எனவே தான், மூன்று நாட்கள், தனியாக, ஓய்வில் இருக்க செய்வர்.

மாலை நேரங்களில், வெளியில் செல்லக் கூடாது. இந்த காலத்தில் வரும் ரத்த வாடை, மிருகங்களை ஈர்க்கும் வல்லமை பெற்றது. எனவே தான் வெளியில் சென்றால், கரி கட்டையும், இரும்பு துண்டும் கொடுத்து அனுப்புகின்றனர். கரித்துண்டும், இரும்பும் கெட்ட சக்திகளை ஈர்த்து, அவர்களை காப்பாற்றும்.

பெண்களது உடல், அனைத்து சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும் போது, கோவிலுக்கு வந்தால், அங்குள்ள விக்ரக சக்திகளுக்கு சிதைவு ஏற்பட்டு, பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் போகும். இதனால் தான், அந்த மூன்று நாட்கள், கோவிலுக்கு செல்லக் கூடாது என்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் சக்தியும் காணாமல் போகும்.

இந்த காலத்தில் யாரேனும் இவர்களை தொட்டாலோ, அருகில் வந்தாலோ, அவர்களது உடலில் உள்ள சக்திகள் குறைந்து, ஆரோக்கிய குறைவு ஏற்படும். இதனால் தான், யாரையும் தொடக் கூடாது என்றும் கூறினர்.

* இச்சமயத்தில் தலைக்கு குளிக்கக் கூடாது. குளித்தால், வெப்பம் குறைந்து, கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உள் தங்கி, கட்டிகளாக மாறிவிடும்

* சணல் சாக்கில் உறங்க வேண்டும். இது, வெப்பத்தை பாதுகாத்து, கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவி புரியும்

* எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும்போது, மற்ற இயக்க சக்திகள், அவர்களது கர்ப்பப்பைக்கு சக்தியை கொடுத்து, கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். ஓய்வில்லாமல் வேறு வேலைகளில் இருந்தால், கழிவுகள் முழுமையாக வெளியேறாமல், நீர்கட்டிகளாக மாறும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும், அறிவியல் காரணங்கள் உண்டு. இவை அனைத்தும் அவர்களது நன்மைக்காகவே என்பதை, மறைத்து விட்டனர்; மறந்தும் விட்டோம்.

பெண்களை அனுமதித்தால்....

சபரிமலையில், ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வழிபாட்டு முறை உள்ளது. பெண்களை அனுமதித்தால், பெண் உடலில், 'ஹார்மோன்கள்' அதிகரித்து, அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்காமல் போக வாய்ப்புண்டு

லட்சக்கணக்கான ஆண்கள் ஒன்று சேரும் கூட்டத்திற்குள் பெண்களை அனுமதித்தால், ஆண்களின் ஆன்ம பலம் சீர்குலைக்கப்படும்; ஆண் சக்தியின் வீரியம் குறையும். ஆண்கள் எதற்காக செல்கின்றனரோ, அதன் பலன் கிடைக்காமல் போகும்

நம் கலாசாரத்தை அழித்தொழிக்க, ஆங்கிலேய கல்வி முறையான, 'மெக்காலே' திட்டத்தின் நீட்சியே இது.

நம்மை அழிக்கத்துடிக்கும் உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு, இவை எல்லாம் நன்றாக தெரிந்ததால் தான், சில வெளிநாட்டு அமைப்புகள் மூலம், பெண்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தது,

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, 'பீட்டா' அமைப்பிற்கு, நம் காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ, அதே அக்கறை தான், இன்று நம் பெண்கள் மீதும் வந்துள்ளது.

இவர்களின் நோக்கம், ஆணின் ஆண் தன்மையையும், பெண்ணின் பெண் தன்மையையும் குறைத்து, இருவரையும் மலடாக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் வந்த, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை மற்றும் பெண், கணவனை தவிர, வேறு ஒரு ஆணுடன் இருந்தாலும் குற்றமல்ல போன்ற தீர்ப்புகளை பெற்றதும், இவர்கள் தான்.

அறிவிற்சிறந்த, வீரம் பொருந்திய அடுத்த தலைமுறை உருவாக கூடாது என்று பயந்து போய் இதை சீர்குலைக்க திட்டமிட்டு, காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

ஒரு மண்டலம்; அறிவியல் பின்னணி!

சூரியனின் புற ஊதா கதிர்கள், நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான், அனைத்து உயிர்களும் பயன்பெற்று வாழ்கின்றன என்பதை, நாம் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

அதே போல் தான், கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர்வீச்சுகளும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவை இருக்கும் தூரம், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாக, அதில் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளி, சூரிய ஒளியை போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம்மை வந்தடையும் கதிர் வீச்சுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும், கோள்களையும், 12 ராசி கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் ஒன்பது கோள்களாகவும், நம் முன்னோர் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தியுள்ளனர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தினசரி காலண்டரில், ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றும் ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல், வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை, அதன் பெயர்களை வைத்தே அறியலாம்.

கிரகங்கள் - ஒன்பது, ராசி கூட்டங்கள் - 12, நட்சத்திர கூட்டங்கள் - 27. இந்த மூன்றையும் கூட்டினால், 9+12+27=48.

சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும், இன்னும் பல விஷயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் தான், இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும். நம்பினாலும், நம்பா விட்டாலும் நம் மீது பரவி, நம் செயல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனவே தான், தொடர்ந்து, 48 நாட்கள் - ஒரு மண்டலம் செய்யும் எந்த ஒரு செயலும், மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட, எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட சொல்வர். அப்படி செய்தால், அந்த நோய் நிரந்தரமாக குணமாகும்.

- புஷ்பலதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us