PUBLISHED ON : செப் 03, 2023

அ நிறம் | அளவு
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வர். அரசியல்வாதிகளுகக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
கண்ணனை மனம் உருகி போற்றி பெண்கள் வழிபட்டால், திருமண தடை விலகி திருமணம் கைகூடும்.
விவசாயிகள், கிருஷ்ணரை வழிபட்டால், வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். தொழில் அதிபர்கள், கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும்.
கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவர்; தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
