PUBLISHED ON : ஏப் 30, 2017

ஐரோப்பிய நாடான பிரான்சில், சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அமெரிக்காவை போலவே, இங்கும், பல சுற்றுக்களாக தேர்தல் நடத்தப்பட்டு, இறுதியில், ஒவ்வொரு கட்சியின் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
வேட்பாளர் பிரசாரத்தின் போது, பிளஷர் கட்சி சார்பில் போட்டியிட்ட, ௫௨ வயதான
சிண்டி லீ என்ற பெண், தன் ஆதரவாளர்களுடன் பாரீஸ் நகரில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திற்க்கு வந்தவர், திடீரென, தான் அணிந்திருந்த, மேல் சட்டையை அகற்றி, அரை நிர்வாண கோலத்தில், ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தகவல் அறிந்த போலீசார், ஏதோ போராட்டம் நடக்கிறது என, அங்கு வந்து விசாரித்தபோது தான், அதிபர் தேர்தலுக்காக, அவர் ஓட்டு சேகரிக்கிறார் என, தெரியவந்தது. இதன்பின், அதிரடிப் படை போலீசார் வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்,
சிண்டி லீ.
— ஜோல்னாபையன்.
