PUBLISHED ON : நவ 25, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நகத்துக்கு மட்டும் தான், பல நிறங்களில், 'பாலீஷ்' போடலாம் என, சட்டம் உள்ளதா என்ன... பல்லுக்கும் போடலாம்...' என்கிறது, அமெரிக்காவைச் சேர்ந்த, 'குரோம்' என்ற நிறுவனம்.
இந்நிறுவனம், பற்களில் பூசும் பாலீஷை, 10 விதமான நிறங்களில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இதை பூசுவதால், உடல் நலனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதாம்.
'சாதாரண பற்பசையை வைத்து, பல் துலக்கினாலே, இந்த பாலீஷ், போய் விடும். அப்படி இல்லாவிட்டாலும், 24 மணி நேரத்தில், தானாகவே அழிந்து விடும். எனவே, இதை பயன்படுத்துவதற்கு எந்த தயக்கமும் வேண்டாம்...' என்கிறது, அந்நிறுவனம்.
அமெரிக்காவில், தற்போது, இந்த பாலீஷ், பெண்களிடையே பிரபலமாகி விட்டது. இளம் பெண்கள், தாங்கள் அணியும் உடைகளின் நிறத்துக்கு ஏற்றபடி, பற்களுக்கும் பாலீஷ் போட்டு அசத்துகின்றனர்.
— ஜோல்னாபையன்.

